பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 காட்டினார். இப்போது ஒரு பாம்பாட்டியைக் காட்டுகிறார். "இந்தப் பாம்பாட்டியைக் கண்டு அஞ்சாதே. இவர்தாம் நாம் காண வந்திருக்கும் குழந்தைப் பெருமானாகிய முருகனுக்குத் தந்தை. இவருடைய பிள்ளையைத்தான் நாம் பார்க்க வேண்டும்: என்று தம்முடன் வந்திருப்பவனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். கணபணக் கட்செவியால் பணிஅணி கோமான் மகனை. கணம் - கூட்டம். பணம் - படம். கூட்டமான படங்களை உடைய, கண்ணும் காதும் ஒன்றாக இருக்கிற கட்செவியாகிய பாம்பை ஆபரணமாக அணிந்து கொள்ளும் சிவபெருமானாகிய இந்தக் கோமான் மகனை நாம் காண வந்திருக்கிறோம் என்று அழைத்துப் போகிறார் அருணகிரியார். பாம்பும் சந்திரனும் & 4 * - - • s o திருமாலுக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தும் குரங்கைக் கொண்டு கடலை அடைத்தவர் என்று அறிமுகம் செய்து வைத்தீர்கள். அதற்குக் காரணத்தையும் தெரிவித்தீர்கள். பரமேசுவரருக்கு வேறு அடையாளங்கள் இல்லையா? இந்த அடையாளத்தோடு எனக்கு அறிமுகம் செய்து வைப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா?' என்று கேட்கிறான் உடன் போனவன். அவர் விளக்குகிறார். - பாம்புக்கும் சந்திரனுக்கும் பகை. நஞ்சு கக்கும் படங்கள் கூட்டமாக உடைய பாம்புக்குப் பக்கத்தில்தான் எம்பெருமான் ஜடாபாரத்தில் சந்திரன் இருக்கிறது. பாம்பு இருக்கிறதே என்று சந்திரன் அஞ்சுவது இல்லை. நமக்குப் பகையாகிய சந்திரன் இருக்கிறானே, அவனை விழுங்க வேண்டும் என்று பாம்பும் நினைப்பது இல்லை. பயத்தைக் கொள்ளாமல் சந்திரன் இருக் கிறான். சந்திரனை விழுங்கும் பகையாகிய பாம்புகளோ நஞ்சைக் கக்காமல் பகை உணர்ச்சியை விட்டுவிட்டுச் செயல் மாண்டு கிடக்கின்றன. நம்முடைய மனம் என்னும் பாம்பு ஐந்து பொறிகளின் வாயிலாகப் பகையாகிய நஞ்சைக் கக்காமல் செயல் அற்று இருக்க வேண்டும். செயலற்று இருப்பதற்கு அறிகுறியாகத் தானே 2O3