பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 "தொழுதகை தலைமீ தேற' என்று பாடுகிறார் பரஞ்சோதியார். அவர் உள்ளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து கண்ணிர் ஆறாகப் பெருகி, தொழுத கைகள் அவரை அறியாமல் தலைமேல் ஏறுகின்றனவாம். - அன்பு உள்ளத்தில் இல்லாவிட்டால் கைகள் குவிவது இல்லை. அன்பு இல்லாமல் கைகள் குவிவதால் அதற்குப் பயனும் இல்லை. அன்பினாலே நாம் கையைக் குவிக்கப் பழகிக் கொண் டோமானால் நம் நினைவு இல்லாமல் கைகள் தாமே குவியும் நிலைமை வந்துவிடும். இவற்றையெல்லாம் நினைந்து அருண கிரியார், "எம்பெருமானே! என்னுடைய கைகள் உண்மையான அன்பு காரணமாகக் குவியாமல் வீணாக இருக்கின்றனவே: என்று பாடுகிறார். ★ கவியால் கடல்அடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட் செவியால் பணிஅணி கோமான் மகனைத் திறல்அரக்கர் புவிஆர்ப் பெழத்தொட்ட போர்வேல் முருகனைப் போற்றிஅன்பால் குவியாக் கரங்கள்வந்து எங்கே எனக்குஇங்ங்ன் கூடியவே? (குரங்குகளால் கடலை அடைத்த திருமாலின் மருமகனை, கூட்ட மாகிய படங்களை உடைய பாம்பால் ஆபரணம் அணிந்த பரமேசுவர னுடைய புதல்வனை, பலமுடைய அசுரர்களின் உலகத்தில் அச்சத்தால் ஆரவாரம் எழும்படி எடுத்த போருக்குரிய வேலை உடைய முருகனை, வழிபட்டு அன்பினாலே குவியாத கைகள் எங்கே எனக்கு இப்படி அமைந்தன? கவி - குரங்கு கணம் - கூட்டம். பணம் - படம். கட்செவி - பாம்பு. திறல் - வலிமை. அரக்கர் என்பது இராட்சதர்களுக்குரிய பெயராயினும் இங்கே அசுரர்களைக் குறித்தது. ஆர்ப்பு - ஆரவாரம் . இங்ங்ன் - இவ்வாறு.) 216