பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த விடும் ஆகவே, உண்மை தெரிந்தவர்கள், உடம்பு இருக்கும் போதே, உயிர் உடம்பை விடும்போது சென்று சேர வேண்டிய லட்சியத் திலே குறியாக இருப்பார்கள். அந்த லட்சியத்திற்குத் தடையாக இருக்கிற உலக மாயையில் சிக்க மாட்டார்கள். உடம்பிலுள்ள பற்றை மாற்றி இறைவன் தாளிலே பற்று வைப்பார்கள். அவர்கள் உடம்பினால் வரும் இன்பத்தை எண்ணா விட்டாலும் தாம் பற்றுகின்ற பொருளை அடைவதற்கு இதனை ஒரு கருவியாக வைத்திருப்பார்கள். தாமரை வளர வேண்டு மானால் சேறுள்ள குளம் வேண்டும். சேற்றிலே முளைக்கின்ற தாமரை வேண்டுமென்பவன் குளத்தின் சேறு இழிந்த பொருளாக இருந்தாலும் அதைக் காப்பாற்றுவான். உடம்பு சேறு நிறைந்த இடமாக இருந்தாலும் முளைக்கின்ற தாமரை ஆகிய ஞானத்திற்காக, ஞானிகள் அதைக் காப்பாற்றினார்கள். உடம்பு நிலையற்றது என்பது தெரிந்தமையால் அது செய்துப் போவதற்குள், முத்தியின்பத்தைப் பெறுவதற்கு முயன்றார்கள். இந்திரிய சுகத்தை எண்ணியே நாம் உடம்பினிடத்தில் அபி மானம் கொள்கிறோம். ஞானிகளோ, ஞானத்தைப் பெறுவதற்கு, இறைவனின் தாளாகிய முத்தி வீட்டைப் பெறுவதற்கு உடம் பினிடத்தில் அபிமானம் கொண்டார்கள். மாணிக்கமும் துணியும் அற்புதமான மாணிக்கத்தைப் பெற்றவன் ஒருவன் அழுக் கான கிழிசல் துணி கிடைத்ததனால் அதில் முடிந்து கொண்டு போகிறான். அழுக்குக் கிழிசல் துணியில் அவனுக்கு இருக்கும் அபிமானம் அதனுள் இருக்கும் மாணிக்கத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதால் உண்டாகிறது. வீட்டுக்குச் சென்ற பிறகு மாணிக்கத்தைப் பெட்டியில் வைக்கிறான். பிறகு கிழிசல் துணியை எறிந்து விடுகிறான்; அதைப் பற்றிக் கவலைப் படமாட்டான். உயிராகிய மாணிக்கம் இறைவனது தாளாகிய பெட்டியை அடையும் வரைக்கும் அது பத்திரமாக இருக்க வேண்டுமென்று அது முடியப்பட்டிருக்கும் உடம்பாகிய அழுக்குக் கந்தையிடம் அபிமானம் வைத்திருப்பார்கள். நம்மைப் போலக் கண்டதைத் 229