பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பேசுகின்றோம். அந்தச் செயல்கள் அருமையாக இருப்பதனால் தான் நம் கவனம் அந்தத் திசையில் செல்கிறது. அப்படியே எங்கேனும் அருமையாக ஒரு வீட்டில் பேய் இருந்தாலும் ஒருவனைப் பேய் பிடித்தாலும் அதனை நினைக் கிறோம். வேறு ஒரு வகையில் எல்லோருமே பூதம் பிடித்த வீட்டில் இருக்கிறார்கள். ஒரு பூதம், இரண்டு பூதம் அல்ல; ஐந்து பூதங்கள் தங்கி இருக்கிற வீட்டில்தான் யாவரும் குடி இருக்கிறார் கள். அதனால் அதைப் பற்றி நினைக்கிறதில்லை. பூத வீடு உலகத்திலுள்ள மக்கள் எல்லோருமே உடம்போடு பொருந்திய உயிர்கள். உடம்புகள் மக்கள் ஆவதில்லை. அவை உயிர்கள் குடி இருக்கும் வீடுகள். உடம்பு என்பது ஐந்து பூதங்களால் ஆனது. அதனால் இதனைப் பெளதிக சரீரம் என்று சொல்வார்கள்; யூத வீடு. இந்தப் பூத வீட்டில் நாம் செய்கிற காரியங்கள் எல்லாம் அந்தப் பூதங்களைச் சார்ந்து விடுகின்றன. ஆத்மாவுக்கு இன் பத்தைத் தரும் செயலாக இராமல் இந்திரியங்களுக்கு இன்பத்தைத் தரும் செயல்கள் யாவுமே பூதங்களைத் திருப்திப்படுத்துபவை என்று சொல்லலாம். பேய் பிடித்தவன் உண்ணுகின்ற உணவைப் பேய் உண்டுவிடுகிறதென்று சொல்வதுண்டு. அது போலவே இந்த உடம்பை வளர்ப்பதற்கே, இந்த உடம்பாக நிற்கின்ற ஐந்து பூதங்கள் வளம் பெறுவதற்கே, நாம் அநேகமாக எல்லாச் செயல் களையும் செய்கிறோம். அந்தக் காரணத்தால் நாம் உண்ணுகிற உணவு, பேசுகின்ற பேச்சு ஆகிய எல்லாவற்றையுமே பூதங்கள் தம்முடையன ஆக்கிக் கொள்கின்றன என்று சொன்னால் தவறு இல்லை. - நிலையாத வீடு இந்தப் பூத விட்டிற்குள் புகுந்து கொண்டு. பூதங்களின் செயலுக்கு அகப்படாமல் நின்று போரிட்டு, இந்த வீட்டை விட்டு நல்ல இடம் போகவேண்டும் என்ற உறுதியோடு, அதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்கிற மக்கள் சுதந்தரமான வீட்டைப் பெறுவார்கள். பெரும்பாலோருக்கு இந்த வீட்டில் பூதங்கள் இருக்கின்றன என்பதே தெரியாது. இயல்பாகவே நமக்கு 242