பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு உண்டாயிற்று. இந்த வீரச் செயலை நினைப்பூட்டும் இடம் வழுவூர். வழுவையூர் என்பதே அப்படித் திரிந்துவிட்டது என்று எங்கள் ஆசிரியப் பெருமான் சொல்வார். வழுவை - யானை. யானை என்ற அறிகுறி நல்ல பொருளையும், கெட்ட பொருளையும் குறிக்கும். ஞானத்தை யானையாக உருவகிப்பது உண்டு. இது நல்ல பொருள். அகங்காரத்திற்கும் யானை அறிகுறி. இது கெட்ட பொருள். 'ஆங்காரம் என்னும் மதயானை' என்பது தாயுமானவர் பாடல். இறைவன் ஆணவம் இல்லாமல் இருப்பவன். "ஆணவம் அகன்ற சுத்த அறிவல்லால் உருவம் இல்லாத் தானு' என்பது சாத்திரம். அவன் இருக்கும் இடத்தில் ஆணவத்திற்கு வேலை இல்லை. அவன் திருவருளினால் ஆணவம் ஒழியும். யானையை அவன் அழித்தான் என்பதன் உட்கருத்து, எம்பெருமான் ஆணவத்தை நீக்கி ஞானத்தைத் தருவான் என்பதே. யானையை வென்றதோடு நில்லாமல் அதன் தோலை எம் பெருமான் போர்த்துக் கொண்டிருக்கிறான். மான், புலி, சிங்கம், முதலியவற்றை வேட்டை ஆடுகிறவர்கள் அந்த அந்த விலங்கின் உறுப்புகளைத் தம்முடைய வீட்டில் வைத்திருப்பது உலக வழக்கம். அவர்கள் வீட்டுக்குப் போனாலேயே அவர்கள் அந்த விலங்குகளை வேட்டையாடின வீரர் என்பது புலப்படும். அவ்வண்ணமே எம்பெருமான் ஆனைத் தோல் ஆடையை மேல் போட்டுக் கொண்டிருக்கிறான். தான் செய்த வீரச்செயலை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று அதனைச் செய்ய வில்லை. ஆணவத்தால் துன்புறுகின்ற ஆருயிர்களுக்கு அந்த ஆணவத்தை போக்குவதற்குரிய திருவருள் இந்தப் பெரு மானிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கு வதற்காகவே அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். எங்கேனும் விழா நடந்தாலும் வேறு வகையான கூட்டங்கள் நடந்தாலும் அங்கே தொண்டர்கள் வேலை செய்து கொண்டிருப் பார்கள். அந்தத் தொண்டர்களுக்குத் தலைவராக இருப்பவர் அவர்களை இயக்குவிப்பார். அவர்களுக்கெல்லாம் தம்முடைய சட்டையில் போட்டுக் கொள்வதற்குச் சில வகையான அடையாளச் சின்னங்களைத் தருவார்கள். அந்தச் சின்னங்களைக் 251