பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு எனவே, இருகோட்டு ஒரு கைப் பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகன்' என்று சிவபெருமானைச் சொன்ன மையினால் அவன் ஆணவத்தை அழிக்கும் திறல் பெற்றவன், மும்மலத்தைப் போக்கும் மூர்த்தி என்று சொன்னதாக முடியும். அத்தகைய பெருமானுக்குக் குருமூர்த்தியாக வந்தவன் முருகப் பெருமான். வேலவன் குரு உருவத்தில் வந்தவன் வேலாயுதம் படைத்த பெருமான். இருகோட்டு ஒரு கைப் பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன். ஆணவத்தை ஒழித்து, மலத்தை நீக்கும் எம்பெருமானுக்கு ஞானம் வரும்படியாகச் செய்தவன் முருகன் என்பது உயர்வு நவிற்சியாகத் தோற்றலாம். உலகுக்குத் தன் தகுதியைக் காட்டு வதற்காகச் செய்கின்ற திருவிளையாடல்கள் அவை. - திரிபுராந்தகனுக்குக் குரு உருவில் வந்தவன் வடிவேற் பெருமான் என்று சொன்னார் அருணகிரிநாதர். சிவபெருமானைப் பலவகையில் புகழ்ந்துவிட்டு அவனுக்குக் குருவாக இருக்கும் தகுதி முருகப் பெருமானுக்கு உண்டு என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். 'முருகன் ஞானகுருவாக வந்தவன். அதற்கு அடையாளமாகத் திருக்கரத்தில் வேலை வைத்திருக்கிறான். அது ஞான சொரூபம். அவன் ஞான உபதேசம் செய்கின்ற தேசிகன் என்பதைக் காட்டுகிறது. ஆகையால் குருபூத வேலவன்' என்று அடையாளம் சொன்னார். - சூரகுலாந்தகன் ஞான உபதேசம் செய்பவனாகிய அவன் அஞ்ஞானம் முழுவதையும் அழிப்பான். அந்த ஆற்றலும் முருகப் பெருமா னிடத்தில் இருக்கிறதென்பதைப் புராணத்தைக் காட்டியே சொல்கிறார் அருணகிரிநாதர். குருபூத வேலவன் நிட்டுர குர குலாந்தகனே. 253