பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் கிரியார். முருகப் பெருமானிடத்தில் உண்மையான நம்பிக்கை வைத்து, தம்முடைய செயல்களை எல்லாம் ஒழித்து, 'கந்தா, முருகா, குமரா, குகா' என்று வெற்றிவேல் பெருமாளின் நாமம் புகல்கிறவர்கள் என்ன என்ன பயன்களை அடைவார்கள் என்று சொல்கிறார். முடியாப் பிறவிக் கடலில் புகார்,முழு தும்கெடுக்கும் மிடியால் படிவில் விதனப் படார்,வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம்.அடங்கப் பொடிஆக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே. பிறவி நீங்குதல் நம்முடைய பிறப்பு, முடியாமல் தொடர்ந்து வருவது. இதற்கு ஆரம்பம் இல்லை; அந்தம் இல்லை. இறைவனை நம்புகிறவர்கள் முடிவு இல்லாத இந்தப் பிறவிக் கடலுக்குள் புக மாட்டார்களாம். முடியாப் பிறவிக் கடலில் புகார். வைய வாழ்வு உடம்பு இறந்து போகப்போகிறது. இந்த உடம்பு போய்ப் பின்னாலே பிறவி இல்லாமல் இவ்வுயிரை அவன் ஆண்டுகொள் வது இருக்கட்டும். இறந்த பிறகு அல்லவா அந்தக் கவலை? இறக்கும் காலத்தில் வேண்டுமானால் வேறு பிறவி எடுக்காமல் இருக்க இறைவனை நினைக்கலாம். இப்பொழுது அந்த வான வாழ்வைப்பற்றிக் கவலை இல்லை. வைய வாழ்வைப் பார்ப் போம். அவன் நாமத்தை நினைத்து, வாழ்த்தி, தியானிப்பதால் உடம்பொடு வாழும் காலத்திலே ஏதாவது பயன் உண்டா? இப்படிக் கேட்பவர்கள் அதிகம். அவர்களுக்கு விடை சொல்வதற்கேற்ற வகையில் அடுத்த அடியைச் சொல்கிறார் அருணகிரியார். S SS SS C SS S S S S S C C C S S S S S S S S S S S S S முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப்படார். 19