பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் t நாம் திருக்கோயிலில் காணும் இறைவனுடைய அற்புதமான விக்கிரகத்தை வித்தாக மனத்தில் பதித்துத் தியானம் செய்து, பக்தி ஏற ஏற அந்தத் திருவுருவமே ஆனந்தக் கடலில் அமுதம் போலத் தோற்றும் என்பதைப் போன பாட்டில் அருணகிரிநாதர் சொன்னார். மறுபடியும் அடுத்த பாட்டில் எம் பெருமான் திருவருளைப் பெறுவதற்கு எளிய வழி ஒன்றைச் சொல்கிறார். நல்ல மலர்களில் மணமும் தேனும் இருக்கும்; மென்மையும் இருக்கும். அந்த மலர் வாடி வதங்கி மாய்ந்து போனாலும், மணம் அதனோடு போய்விட்டாலும் அதில் உள்ள தேனை நாம் பெறலாம். அந்தத் தேனை நமக்காகச் சேமித்து வைக்கிறது வண்டு. வண்டு மலர்களில் உள்ள தேனைச் சேமித்துத் தானும் உண்டு, பிறருக்கும் பயன்படச் செய்யும் இயல்பு உடையது. வண்டுகளின் வகை பெண்டுகள் என்று சொன்னவுடன் நமக்குத் தேனைத் தொகுக்கும் வண்டு நினைவுக்கு வருகிறது. உலகில் பல வகையான வண்டுகள் உண்டு. இழி பொருள்களை உருட்டுகிற வண்டுகளையும் நாம் பார்த்திருக்கிறோம். தேனை உண்ணும் வண்டுகளிலும் பலவகை உண்டு. சிறு சிறு மலர்களிலிருந்து தேனைச் சேகரித்து மிகத் தாழ்ந்த இடத்தில் கூடு கட்டி வைக்கும் வண்டுகள் ஒருவகை. தாமரை முதலிய மலர்களிலிருந்து தேனைத் தொகுத்து மிக உயர்ந்த மரங்களில் மலையின்மேல் தேன்கூடு கட்டும் வண்டுகள் இருக்கின்றன. பிறருடைய கையும் கண்ணும் படாமல் தேனை வைக்க வேண்டுமென்பது அந்த வண்டுகளின் நோக்கம் போலும். நாம் உண்ணுகிற பொருள் பிறருடைய கையும் கண்ணும் படாமல் இருந்தால் நல்லது என்று $.Q&T.III–21