பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 போரின் முடிவு ஒரு சிறிய அறையில் தீர்மானம் ஆயிற்று. கண்ணபிரானுடைய இரண்டு திருவடிகளைத் தன் கருத்தினாலே பிணைத்த சகாதேவன் அந்தப் பெருமானிடம் கேட்டுக் கொண்ட வரந்தான் பாரதப் போரில் பஞ்சபாண்டவர் களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. அவன் அப்போது விண்ணப்பித்த விண்ணப்பமே பிறகு போர்க்களத்தில் அருச்சுனனின் காண்டீபத்திற்கும், தருமனின் அறத்திற்கும் வலிமை தந்தது. திரைக்கு மறைவில் பச்சைப் பசுங்கொண்டலைச் சகாதேவன் பிணித்து அவன் திருவடியைப் பற்றிக் கொண்டு அன்பின் வலிமையைக் காட்டிய செயல்தான் அந்த வெற்றிக்கு மூலம் தூயவனாகிய சகாதேவ னுக்குத்தான் அந்தப் பெருமானுடைய மூலம் எங்கே இருக்கிற தென்று தெரிந்தது. எத்தனை ஆயிரம் திருவுருவங்கள் எடுத் தாலும் அவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பன இரண்டு திருவடிகள் என்பதை ஞானியும், அன்பனுமான சகாதேவன் நன்கு உணர்ந்து தன் கருத்தைச் செலுத்திக் கட்டினான். புத்தியை வாங்கி இறைவனுடைய பாதாம்புயத்தில் புகட்டி அன்பால் கட்டும் ஆற்றல் சகாதேவனைப் போன்ற பெரியவர்களுக்கு உண்டு. வள்ளுவர்க்கும் உடம்பாடு ஆகவே, கடவுள் பலபல உருவங்களில் இருந்தாலும், அந்த உருவங்களில் பலபல வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாவற்றுக் கும் மூலமாகவும், பொதுவாகவும் இருப்பவை அவனுடைய திருவடி மலர்கள். அதனால் மற்றவற்றைச் சொல்லாமல் திரு வள்ளுவரைப் போல இந்தப் பாட்டில் அருணகிரியார், "பாதாம் புயத்திற்கு புகட்டி' என்று சொன்ன்ார். திருவள்ளுவர் அடியைச் சொன்னதனால் அவருக்கு உருவம் உடம்பாடு என்று தெரிகிறது. திரைக்குப் பின் இரண்டு அடிகள் தெரிகின்றன என்றால் முன்னால் இருப்பவர்களுக்கு அந்த அடிகளைக் கண்ட மாத்திரத்தில் யாரோ உள்ளே இருக்கிறார் என்பது தெரியும். மற்ற அங்கங்கள் தெரியவில்லையே என்று சந்தேகப்படமாட்டார்கள். அப்படியே திருவள்ளுவர் தம்முடைய கடவுள் வாழ்த்தில் இறைவனுடைய இரண்டு அடிகளைச் சொன்னாலும் மற்ற உறுப்புகளும் உண்டென்பது அவருக்கு உடம்பாடு என்று தெரிந்து கொள்ள வேண்டும். 326