பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 என்ற வேறுபாடின்றி, மேடுபள்ளம் என்ற வேற்றுமை இல்லாத நிலையை அடையவேண்டும். அத்தகைய நிலையில் அவன் நின்றால், பசை யாவும் அற்று நின்றால், அப்போது அவனுக்கு முத்தி சித்திக்கும். அந்த இடத்தில் வீடு கிடைக்கும். அந்த நிலையை, 'நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பில் அதனை உணர்ந்துணர்ந்து சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால் அன்றே அப்போ தேவிடதுவே வீடு விடாமே” என்று நம்மாழ்வார் சொல்கிறார். "அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்றும் சொல்கிறார். முத்தி என்பது ஒரு நிலைவகையே யொழிய இடவகை அன்று. மனம் அழுக்கெல்லாம் போய்த் தானே முதலில் தூயதாகி அப்பால் தானே அழிகின்ற சமயத்தில் கிடைக்கின்ற இன்ப நிலையே முத்தி. இந்தப் பாட்டில், ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு ஒரு பொருளை வாங்கவேண்டுமென்று சொல்வது போல அருண கிரியார் முருகனிடம் விண்ணபித்துக் கொள்கிறார். இன்ன கடையில் இவ்வளவு பணத்தைக் கொடுத்து விட்டு இன்ன சரக்கை வாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லையே! என்று கூறுவது போலச் சொல்லியிருக்கிறார். அன்பும் அறிவும் 'உன்னுடைய பாதாம்புயத்திற்கு என்னுடைய மனத்தை அனுப்பி அங்கே அன்பைக் கொடுத்து முத்தி என்ற பொருளை வாங்குவதற்கு நான் தெரிந்து கொள்ளவில்லையே!” என்பது அவர் கூறுவது. அன்பினால்தான் இறைவனுடைய திருவருளை வாங்கிக் கொள்ளலாம். 'அருள்என்னும்அன்பீன் குழவி' என உலக இயலை நினைந்து வள்ளுவர் சொல்கிறார். இறை வனுடைய அருளைப் பெறுவதற்கும் அது பொருந்தும். நம்மிடத் தில் அன்பு உண்டானால் இறைவன் நமக்கு அருளைப் பாலிப் பான். நம் அறிவு வெறும் அறிவாக நில்லாமல் அன்பு மயமாக 328