பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 யிருக்கிறார்கள்' என்பவர்களே திருடர்கள், நய வஞ்சகர்கள். அதனால்தான் உலகத்திலுள்ளவர்கள் எல்லாரும் அவர்களுக்கு அப்படித் தோற்றுகிறார்கள். 'உலகிலுள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்கள்; ஆண்டவன் குழந்தைகள்' என்று பார்க்கின்ற மக்கள் இல்லையா? இப்படிப் பல வழியாகக் கூர்ந்து பார்த்தால் அவரவர்களின் உள்ளத்தின் பண்பே உலகத்தில் பிரதிபலிப்பதை உணரலாம். ஆகவே, துன்பம் இன்பம் என்பவை அவரவர்களுடைய மனத்தின் பண்பையும், திண்மையையும் பொறுத்து இருக்கின்றன. ஒருவன் மலைபோல இருக்கிற பொருளைப் பொடியைப் போல் இருக்கக் காண்கிறான். அணு அணுவான திவலைகளைக்கூட ஒருவன் மலைபோல எண்ணி மலைத்து நிற்கிறான். எல்லா விதமான இன்ப போகங்களும் நிரம்பப் பெற்ற மாளிகையில் இருப்பவன் நரகத்தில் வாழ்பவனைப் போல அவதியுறுவதும் உண்டு. வறிய நிலையில் இருப்பவனோ வள வாழ்வு நிரம்பப் பெற்ற மாளிகையில் இருப்பதாக மகிழ்வதும் உண்டு. நரகத்தையே நல்லதாகப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். மாணிக்கவாசகர் அத்தகையவர். 'இறைவனே! உன் திருவருள் துணை எனக்கு இருந்தால் நரகமானாலும் சரி, அங்கே சென்று வாழ்வேன்' என்று சொல்கிறார். & & S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S நரகம்புகினும் எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவா!' இறைவன் திருவருள் இல்லாவிட்டால் இன்பலோகம் நரக லோகமாகத் தோற்றுகிறது. ஒரு சிறு துரும்பும் கட்டாரியாக இருக்கிறது. இறைவனது நம்பிக்கையோடு வாழ்பவர்களுக்கு நரகம் சுவர்க்கமாக இருக்கிறது. உலகில் உள்ளவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். பெண்டு பிள்ளைகள் எல்லாரும் சொன்னதைக் கேட்பவர்களாக இருக்கிறார்கள். கோழைகளின் இயல்பு ‘வாழ்விலே எவ்விதத் துன்பமும் இன்றி இவர்களைப் படைத்துவிட்டு என்னை எல்லாவிதமான துன்பங்களையும் அது பவிக்கும்படியாக இறைவன் செய்து விட்டானே' என அவறு 38