பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் கின்ற மக்கள் யார்? அவர்கள் இறைவன் திருவருள் துணை இல்லாதவர்கள். பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் அவர் கள் படுகின்ற வேதனை, அஞ்சுகின்ற அச்சம், கொஞ்ச நஞ்சமா? தொட்டதற்கு எல்லாம் பயம். எல்லோரிடமும் சண்டை. சிறிய சிறிய துன்பங்கள்கூட அவர்களுக்கு மலை மலையாக இருக்கின்றன. இறைவன் திருவருள் இல்லாத இத்தகைய கோழைகளுக்கு எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் நேரம் இராது; ஆற்றல் இராது; மனத் திண்மை இராது. 'எனக்குச் சுதந்தரம் இருந்தால் அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன். அந்தப் பாவிதான் என்னை எதுவும் செய்யவிடாமல் அடிக்கிறானே!' என்று பழியைப் பிறர்மேல் சுமத்தி ஏமாந்தும் உலகை ஏமாற்றியும் வருபவர்கள் இந்தக் கோழைகள். இக்கோழைகளுக்கு மலை மலையாகத் தோன்றும் துன்பங்கள் இறைவன் திருவருளால் ஞானம் பெற்ற வீரர்களுக்குப் பொடிப் பொடியாகப் போகின்றன. 2 இந்த இரண்டையும் பிணைத்து அருணகிரியார் ஒரு பாட்டைச் சொல்கிறார். பொட்டாக வெற்பைப் பொருதகந் தா!தப்பிப் போனதுஒன்றற்கு எட்டாத ஞான கலைதரு வாய்;இரும் காமவிடாய்ப் பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும் கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனம் கட்டுண்டதே. நுட்பமான பொருளைப் பெரிதாகக் கருதி அஞ்சுகின்றவர் ஒரு சாரார். பெரிய பொருளை அடியோடு பொடியாக்குகின்றவர் ஒரு சாரார். - மலையைப் பொடியாக்கியது மனிதனுக்கு இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் அதற்கு உவமையாக மலையைச் சொல்வது வழக்கம். 'மலை 37