பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 (கண்ணுக்குத் தெரியாத பொடி ஆகும்படி கிரெளஞ்ச மலையோடு போர் செய்து அழித்த கந்தனே! என் ஆற்றலுக்கு அகப்படாமல் மீறிப் போனதாகிய மனத்துக்கு எட்டாமலிருக்கும் ஞானமென்னும் கலையை நீ எனக்கு வழங்க வேண்டும்; பெரிய காமதாகத்தில் அகப்பட்டவர்களின் உயிரை அதன் போக்கிலே விடாமல் திருகிச் செயலிழக்கும்படி பருகித் தம் பசியைத் தணித்துக் கொள்வனவும் கட்டாரி போலவும் வேல் போலவும் இருப்பனவுமாகிய விழிகளைப் படைத்த தீய மங்கையர்களின் மயலாகிய வலையில் என் மனம் கட்டுப்பட்டுவிட்டதே இனி என் செய வல்லேன்! பொட்டு - கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வடிவுள்ள பொருள். வெற்பை - கிரெளஞ்ச மலையை. பொருத - போர் செய்து அழித்த, தப்பிப் போனது - என் பிடிக்குள் அகப்படாமற் போனது. ஒன்று என்றது மனத்தை விடாய் - தாகம். கட்டாரி - குத்தீட்டி. வலைக்கே - வலையில்.) 50