பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித் துறை விடும். கலங்கி இருக்கும் புத்தி தெளிவதற்கு மிகச் சுலபமான வழி அதுதான். கண்ணப்பனும் சிவகோசரியாரும் பக்தித் துறை இழிந்தால் பக்தன் ஆகிவிடுகிறான். பக்தியின் முடிவு ஆனந்தவாரியைச் சேர்வது. அதை அடைந்தபிறகு வேறு பாடு இல்லை. அந்தணராகப் பிறந்து வேதம் ஓதி இறைவனை வழிபட்ட சிவகோசரியாரும் இறைவனை அடைந்தார்; வேடு வனாகிய கண்ணப்பனும் அடைந்தான். கண்ணப்பன் ஆவதற்கு முன்னாலே திண்ணனாக இருந் தான். குழந்தைப் பருவத்தில் காட்டுக்கு விளையாடப் போனான். புலிக்குட்டியைக் கொன்று தோளில் போட்டு வந்தான். அது அவனுக்கு விளையாட்டு. பிராயம் முதிர்ந்தவுடன் வேட்டைத் தொழிலை மேற்கொண்டான். பல விலங்குகளைக் கொன்றான். கொல்வதே விளையாட்டாகவும் தொழிலாகவும் அவனுக்கு இருந்தது. அவன் கண்ணில் காளத்திநாதன் பட்டவுடனே அவனுக்குப் பெருமான்பால் அன்பு உண்டாகிவிட்டது. அவனை அருச்சித்து வழிபடும் எண்ணமும் அவனுக்கு உண்டாகியது. ஆண்டவனுக்கு அருச்சனை செய்யக் குளித்துவிட்டு நந்த வனத்திற்குச் சென்று வாயை மூடிக்கொண்டு தூய்மையோடு வண்டு கிண்டி இதழ்கள் விரிவதற்கு முன்னே மலரைக் கொய்து கூடையில் எடுத்து வருவார்கள். ஆனால் திண்ணன் காளத்தி நாதனுக்கு எப்படி மலர் எடுத்து வந்தான்? மலரைப் பறித்துத் தன் கொண்டை மயிரையே குடலையாக வைத்துக்கொண்டு வந்தான். ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்யச் சிவகோசரியார் சுத்த மான நீரைத் தூய பாத்திரத்திலே எடுத்து வந்து, ருத்திரம், சமகம் முதலியவைகளைச் சொல்லி அபிஷேகம் செய்வது வழக்கம். திண்ணனோ அபிஷேகம் செய்யும் நீரைத் தன் வாயிலே எடுத்து வந்தான். ஆண்டவனுக்கு நிவேதனம் செய்யப் பன்றி மாமிசத்தைக் கொணர்ந்தான். அதையும் கடித்துப் பார்த்துச் சுவைமிக்க பகுதி யாக எடுத்து வந்தான். அபிஷேகத்திற்கு எடுத்து வந்த மலர் அழுக்கு. நிவேதனத்திற்கு எடுத்து வந்த பன்றி மாமிசம் ஒரே அழுக்கு. இருந்தாலும் அவை எல்லாம் பக்தித் துறை வழியாகப் புகுந்தன. இறைவனாகிய ஆனந்தவாரியோடு சங்கமம் ஆயின. 63