பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இர்ண்டு ஆறுகள் புண்ணியத்தை மாத்திரம் செய்தவனாக இருந்தால் தேவனாகப் பிறப்பான். புண்ணியம், பாவம் ஆகிய இரண்டையும் கலந்து கலந்து செய்ததனால் மனிதனாகப் பிறந்து, ஒரு பக்கம் இன்பம், ஒரு பக்கம் துன்பம் ஆகிய கரைகளை உடைய வாழ்க்கை ஆற்றில் செல்கிறான். இரண்டு பக்கமும் கரை உடையதுதான் ஆறு. - இன்பம் அடையும்போது நம்முடைய பெருமையால் இதனை அடைந்தோம் என்று செருக்கு அடைவதும், துன்பம் வரும்போது அதற்குக் காரணம் பிறரென்று எண்ணிக் கோபம் கொள்வதும் மனிதன் இயல்பு. இரண்டு நிலைகளிலும் முன்னை ஊழ்வினையே காரணம் என்று உணர்ந்து இறைவனை நினைக்க வேண்டும். இறைவன் தன்னை நினைப்பதற்காகவே துன்பத்தைக் கொடுக்கிறா னென்று பெரியவர்கள் எண்ணுவார்கள். துன்பம் வரும்போது, துன்பத்தைத் தந்த ஆண்டவனை மனத்தில் நினைக்கிறவனுக்குக் கோபம் வராது. துன்பத்திற்கு உண்மையான காரணம் யாரோ, அவனைக் கோபிக்கலாம். துன்பத்திற்குக் காரணம் யார்? ஆண்டவன் அல்ல. வலக்கை இடக்கையை அடித்தது. வலக்கை முன் பிறவி, இடக்ககை அடி வாங்குகிற இந்தப் பிறவி, முன் பிறவியில் நாம் செய்த தீவினைகளே இப்பிறவியில் நமக்குத் துன்பமாக விளை கின்றன என்பதை உணர்ந்தால் நம்மை நாமே கோபித்துக் கொள்ளவேண்டும். இரண்டு கரைகள் வாழ்க்கையாகிய ஜீவநதிக்கு ஆண்டவன் இன்பம் துன்பம் என்ற இரண்டு கரைகளை வைத்திருக்கிறான். இந்தக் கரைகளை மீதுர்ந்து வருவது செல்வம் என்ற பெருக்கு. இந்தப் பெருக் கானது கரைகளை மோதினால் வாழ்க்கை அலங்கோலமாகிவிடும். இந்த வெள்ளப் பெருக்கைப் பார்த்து மயங்காது, பக்கத்திலுள்ள கரைகளைப் பார்த்துத் தேங்கிக் கிடக்காது, இவற்றை எல்லாம் கழித்து ஓடவிட்டால் ஆண்டவனாகிய கருணைக்கடலோடு கலக்கலாம். - சுழித்தோடும் ஆற்றில் பெருக்கா னதுசெல்வம், துன்பம்இன்பம் கழித்தோடு கின்றது எக்காலம் நெஞ்சே? ア5