பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு ஆறுகள் 'நமக்கு இன்ப துன்பமற்ற நிலையைக் கொடுத்து ரட்சிக் கின்ற தந்தை ஒருவர் இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் தெரியுமா? ஓர் ஆற்றின் கரையில்தான் இருக்கிறார். காவிரி ஆற்றின் கரையில் திருச்செங்கோட்டில் இருக்கிறார்” என்று ஆரம்பிக்கிறார். "மனமே! நீ திருச்செங்கோட்டில் உள்ளவன் என்று தியானிக்கவில்லையே! என்று சொல்கிறார். காவேரிக்கும் திருச்செங்கோட்டுக்கும் பத்து மைல் தூரம் உண்டு. இந்தக் காலத்தவர்கள், "திருச்செங்கோடு காவேரி ஆற்றின் கரையில் இருக்கிறதா? அருணகிரியார் அந்த ஊருக்கே போகாமல் இந்தப் பாட்டை எழுதியிருக்கிறார் போலிருக்கிறது" என்று சொல் வார்கள். ஆனால் அந்தக் காலத்தில் யாரும் கால்நடைக்கு அஞ்சின வர்கள் அல்ல. அருணகிரிநாத சுவாமி கால்நடையாகவே பல தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அவருக்குத் திருச்செங்கோட்டு வேலனிடத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அக்காலத்துப் பெரியவர்கள் நடையில் சிறந்தவர்கள்; அவர்கள் நாள்தோறும் காலையில் காவிரியில் நீராடிவிட்டு ஆறெழுத்தைச் சொல்லிக்கொண்டே பத்து மைலையும் கால் நடையாகவே கடந்து வந்து, திருச்செங் கோட்டு வேலவனைத் தரிசிப்பார்கள். நமக்கு ஆண்டவன் காவிரி யிலிருந்து பத்து மைல் தூரத்தில் இருப்பவனாகத் தோன்றுவான். ஆனால் முயற்சி உள்ளவருக்கு, பக்தி உள்ளவருக்கு, கால் பலத்தைப் பெற்றவருக்கு, அவன் காவிரியிலிருந்து காலடியில் தான் இருக்கிறான். ஆகையால் காவிரிச் செங்கோடன் என்றார். காவிரியின் பெருமை அந்தக் காவிரி எப்படி வருகிறது? நாம் போகின்ற வழியில் ஒரு சின்ன பொத்தான் கிடந்தால் அதை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொள்கிறோம். அது தங்கப் பொத்தானும் அல்ல; தந்தப் பொத்தானும் இல்லை; பிளாஸ்டிக் பொத்தான். காவிரி யிலோ தந்தம், முத்து முதலியன வருகின்றன. அவற்றை எடுத்துப் பெட்டிக்குள் போட்டு வைத்துக்கொள்ள அது நிற்கின்றதா? இல்லை. தான் சென்று சேரவேண்டிய லட்சியத்தைக் குறிக் கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. காவிரியின் பெருமை கங்கைக்குக்கூட வராது என்று சொல்லலாம். அதனால் கங்கை தாழ்ந்தது என்று பொருள் 77