பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் மறவேன் 1 ஞானம் பெறுவதற்குப் பெரும் தடையாக இருப்பது காமம். இறைவனுடைய திருவருளை அடைவதற்குரிய முயற்சி களைச் செய்யவொட்டாமல் தடுக்கும் உணர்ச்சிகள் பல உண்டு. அவை எல்லாவற்றிலும் மிக வலிமை உடையது காமம். அது அறிவை மறைத்துவிடுகிறது. 'காமத்திற்குக் கண் இல்லை” என்ற பழமொழி அதைத்தான் குறிக்கிறது. காமத்தினால் பெண்களோடு கலந்து இன்பம் நுகர்கிறான் மனிதன். அதனால் மயக்கத்தை அடைகிறான். மயக்கம் அடைகிற காரணத்தினால் காமத்திற்குக் கள்ளை உவமையாகச் சொல்வது உண்டு. கள்ளால் உண்டாகும் மயக்கம் கள்ளைக் குடித்தால் அது மூளையைப் போய்த் தாக்குகிறது. மூளைக்கும் கண்களுக்கும் தொடர்பாக உள்ள நரம்பைப் போய்த் தாக்குகிறது. அதனால் கள் குடித்தவனுடைய கண்கள் திறந்திருந் தாலும் லாந்தல் கம்பம் அவனுக்கு மனிதனைப் போலத் தோன்று கிறது. மனிதனைக் கண்டால் மாடு என்று வெருண்டோடு கிறான். தன் மனத்தின் அடித்தளத்தில் மறைந்திருக்கிற விஷயங் களை வெளிப்படுத்துகிறான். மானம், மதிப்பு, கெளரவம், அந்தஸ்து என்று இதுவரையிலும் எண்ணியிருந்தவற்றைத் துறந்து மனம் போனபடி திரிகிறான். ஒருபுறம் பார்த்தால் உள்ளொன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசும் மனிதனைப் போல் அல்லாமல் உள்ளத்தில் இருப்பவற்றைப் புறத்தில் கொட்டிவிடுகிறான். இன்ப நாட்டம் கள்ளை உண்பவன் அதனாலே இன்பத்தை நாடுகிறான். 'உலகமெல்லாம் பழி கூறுகிறதே! மனத்தில் வைத்துள்ள விஷயங்களை வெளியிட்டு விடுகிறோமே!” என்று அவனுக்குத்