பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு ஆறுகள் கொழித்தோடு காவிரிச் செங்கோடன் என்கிலை; குன்றம்எட்டும் கிழித்தோடு வேல்என் கிலை;எங்ங் னேமுத்தி கிட்டுவதே? 大 (சுழிகளைச் சுழித்து ஓடுகின்ற வாழ்க்கை ஆற்றிலே வெள்ளம் போல வந்து போவது செல்வம்; அந்த ஆற்றின் கரைகளைப் போன்ற துன்பம் இன்பம் என்னும் இரண்டையும் கடந்து ஓடுகிறது எந்தக் காலம்? நெஞ்சமே யானையின் கொம்பிலே விளைந்த முத்துக்களை அரித்துக் கொண்டு ஓடும் காவிரியாற்றுக்கு அருகில் உள்ள திருச்செங்கோட்டில் வாழும் முருகன் என்று சொல்லவும் எண்ணவும் இல்லை; எட்டுக் குன்றுகளையும் கிழித்து ஓடிய வேல் என்று சொல்லவில்லை. நமக்கு முத்தி எவ்வாறு கிட்டும்? பெருக்கு - வெள்ளம். கரிக்கோடு - யானையின் கொம்பு. என்கிலை - என்று எண்ணவில்லை; என்று துதிக்கவில்லை.) 81