பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கிறது. உலகம் நம்மைக் கண்டு பழிக்கிறதே! கிரிக்கிறதே. ೯ಿಲ್ಲ! தெளிவுள்ள சமயத்தில் நினைத்துத் துன்பப்படுகிறான். முதலில் உண்டான போலி இன்பம் நிலைகொள்வது இல்லை. மெய்ஞ் ஞானிகள் தம்மை எப்பொழுதும் மறந்து இருக்கிறார்கள். கள்ளைக் குடிப்பவன் சில நேரத்திற்கு ஒருவாறு தனனை மறந்து இருக்கிறான். அவன் பெறுவது உண்மையான இன்பம் அன்று. உணர்ச்சி மிகுந்தால் காமம் மாத்திரம் அன்று. உள்ளத்தில் எந்த உணர்ச்சி மிகுந்து இருந்தாலும் உலகத்தைப் பாராத நிலை உண்டாகும். பக்தர்களுக்கு அத்தகைய நிலை வருவது உண்டு. மாணிக்க வாசகப்பெருமாள் அரசன் பணத்தை வாங்கிக் கொண்டு குதிரை வாங்கப் போனார். போனவர் அப்பணத்தைக் கொண்டு சிவ பெருமானுக்குக் கோயில் எழுப்பினார். இது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற மாதிரிதான். அரசன் ஏதோ ஒரு காரியத்துக்காகப் பணம் கொடுக்க, அவர் அந்தக் காரியத்தைச் செய்யாமல் பிறிதொரு வகையில் செலவிட்டார். அது தவறுதான். ஆனால் நாம் மாணிக்கவாசகரைக் கொண்டாடு கிறோம். அதற்குத் தக்க காரணம் இருக்க வேண்டும். அவர் கொண்டு போன பணத்திற்குக் குதிரை வாங்கியிருந்தால் குதிரைகளின் உதவி கொண்டு போரை நடத்தலாம். அதனால் பல்லாயிரக் கணக்கான பேர்கள் இறந்து போவார்கள். அவரோ எல்லா மக்களும் இறைவன் அருளைப் பெறுவதற்குத் தக்கபடி செய்தார். அதனால் அவரைக் கொண்டாடுகிறோம். செய்த தொழிலின் பெருமை அதன் பயனால் தெரிய வருகிறது. அரசன் கொடுத்த பணத்தை வேறு யாராக இருந்தாலும் கோயில் கட்டத் தைரியம் கொள்ளமாட்டார்கள். மாணிக்கவாசகரின் உள்ளத்தில் பக்தி உணர்ச்சி மீதூர்ந்து இருந்தது. அதனால் உலகத்தார் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல், பற்றுக்களையும் கடமை களையும் மறந்த நிலையில் அந்தக் காரியத்தைச் செய்தார். அவர் பக்திப் பித்துப் பிடித்தவர். பக்திப் பித்துக் கொண்ட பக்தர்கள் உலகம் தம்மைப் பழிக்கிறதே என்று நினைக்க lossi-L-sfsföðss. 'நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப' 84