பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை சொல்லுகிறது (1). மற்றொன்று முருகப் பெருமானுடைய பெருமையைப் பேசுகிறது (4). உபதேசமானாலும், இரக்க மானாலும், அநுபவமானாலும் ஒவ்வொரு பாட்டிலும் முருக னுடைய தொடர்பு அமைந்திருக்கும்; கந்தர் அலங்காரம் அல்லவா? முருகன், கிழியும்படி அடல் குன்று எறிந்தோன், புணச்சிறு மான் தருபிடி காவலன், சண்முகன், வள்ளி முற்றாத் தனத்திற்கு இனியபிரான், வேள்பட விழியாற் செற்றார்க்கு இனியவன், தேவேந்த்ர லோகசிகாமணி, பொங்கார வேலையில் வேலை விட்டோன் என்று அவன் பெயர்கள் வருவது காண்க. இந்த ஐந்து பாடல்களும் படர்க்கைப் பரவல்; முருகனை முன்னிலையில் வைத்துப் புகழாமல், அவனைப் புகழ்ந்தவை. கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் வாரந்தோறும் நிகழ்ந்து வருகின்றன; நிறைவடையும் நிலையில் உள்ளன. அவை முற்றுப் பெறுவதற்கு முன் இந்த நூல் வரிசையையும் வெளியிட்டு விடலாம் என்ற எண்ணம் ஒருகால் தோன்றியதுண்டு. ஆயினும் சிறிய ஆற்றலுடைய எளியேனுடைய எண்ணத்துக்குத் திண்மை ஏது? இந்த அளவில் முருகன் திருவருள் துணை செய்கிறதே என்று எண்ணி அவனை வாழ்த்துகிறேன். கி.வா. ஜகந்நாதன் O4,CŞ.1958 க.சொ.1V-9 is 9