பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இந்த வாரம் ஒரு தொடர் கதையைப் படிக்கிறோம். அடுத்த வாரம் தொடர் கதையை எடுத்தவுடன் ஒரு வார இடையீட் டினால் எப்படிப் பழைய கதையை நாம் மறக்காமல் மேலே படிக்கிறோமோ அப்படித்தான். தூங்கும் போது நான் இன்னான் என்ற நினைவு இல்லாமல் அயர்ந்து தூங்கினாலும் எழுந் திருக்கும் போதே அந்த நினைவுடன் எழுந்திருக்கிறோம். இது இருட்டுத் தூக்கம். தூங்கும்போது மறக்கிறோம்; விழிக்கும் போது நினைக்கிறோம். இந்தத் தூக்கத்தைக் கேவலாவஸ்தை என்றும், இந்த விழிப்பைச் சகலாவஸ்தை என்றும் சொல்வார் கள். ஞானிகளோ கருவி கரணங்கள் தளர்ந்து போகாமல் சுறு சுறுப்பாக இருந்தாலும் அவற்றைத் தாமாகவே செயலற்றுப் போகும்படி செய்து தூங்குவார்கள். அப்போது விழிப்பும் இராது; துக்கமும் இராது. அதுவே ஞானத் தூக்கம். நினைத்தேன் என்று சொன்னால் முன்பு மறந்திருந்தேன் என்பது சொல்லாமலே புலனாகிறது. மறத்தலும், நினைத்தலும் இல்லாத நிலை ஒன்று உண்டு. நாம் உலகில் வாழும்போது நம்மை மறக்கிறது இல்லை. நன்றாக மறந்து தூங்கினாலும்கூட, நம்மையும் அறியாமல், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று செயல்படுகிற மனத்தின் நான்கு பகுதிகளில் அகங்காரத்தின் விளைவாக நான் என்ற நினைவு எப்போதும் அந்தக்கரணத்தில் இருக்கிறது. அதையும் மறந்து விடுகிற ஒரு நிலைதான் இறை வனிடத்தில் ஒன்றுகின்ற சமாதி நிலை என்பர் பெரியவர்கள். உலகத்து இருள் அகற்றி, எம்பெருமானின் ஞான ஒளியோடு கலக்கிற நிலை அது. உலகத்து ஒளி எல்லாம் நிழல் தருகிற ஒளி. விளக்கின் ஒளிக்கும் சூரியனின் ஒளிக்கும் வேறுபாடு உண்டு. விளக்குப் பிற இடத்திலே ஒளியைக் கொடுக்கிறது. தன்னிடத்திலே தன் நிழலையே பெரியதாகக் காட்டுகிறது. சூரியன் தன்னுடைய நிழலைக் கொடுக்காமல் எங்கே பார்த்தாலும் ஒளியைப் பரப்புகிறான். அவன் ஒளியிலும் நிழல் விழுகிறதே என்றால் அவன் ஒளிக்கு முன்னால் இருக்கும் கட்டிடங்கள், மரங்கள் முதலியவற்றின் நிழல்களே விழுகின்றன. ஒளிக்கு முன்னால் ஒளியைத் தடைப் படுத்துகிற பொருள் இருந்தால் நிச்சயம் நிழலும் இருக்கும். i84