பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி (கோபம் அடங்கமாட்டார்; பொறிகளை அடக்கி ஒடுங்க மாட்டார்; பரமானந்தத் கடலில் செயல் இழந்து தேங்கி நில்லார்; சகல கேவல அவஸ்தைகளை நீங்கார்; தினையளவு போதாவது ஓங்காரமாகிய பிரணவத்தினுள் இருக்கும் ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார்; தொண்டு செய்யார் இத்தகையவர்கள் வாழ்நாள் இறுதியில் யம தூதர்கள் வந்தால் அவர்களால் வரும் துன்பத்துக்கு மாற்றாக அப்போது என்ன செய்வார்கள்? நினைப்பு - ஜாக்கிரமாகிய சகலாவஸ்தை. மறப்பு - தூக்கமாகிய கேவலாவஸ்தை. தொழும்பு - தொண்டு. யமதூதருக்கு - யமதூதரால் வரும் துன்பத்துக்கு: ஆகுபெயர். பசிக்கு மருந்து என்பது போலத் துன்பத்தை நீக்க என் செய்வார் என்று பொருள் கொள்ள வேண்டும்.) இது கந்தர் அலங்காரத்தின் ஐம்பத்தைந்தாம் திருப்பாடல். 143