பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் மனிதன் தான் வாழ்கிற பிரபஞ்சத்தைச் சில நயம் கருதி வெவ்வேறாகச் சொல்வது வழக்கம். தொழிலாளர் உலகம், அரசியல் உலகம், புலவர் உலகம் என்று வெவ்வேறு கூட்டத்தையே வெவ்வேறு உலகமாகப் பிரித்துச் சொல்வதைப் பார்க்கிறோம். பழங்காலத்திலும் அப்படித்தான் பிரித்தார்கள். அந்தப் பிரிவுக்குள் மிகவும் முக்கியமானவை இரண்டு. அவை சப்தப் பிரபஞ்சம், அர்த்தப் பிரபஞ்சம் என்பன. சப்தம் மாத்திரமாக இருக்கிற உலகம் ஒன்று. பொருளாக இருக்கிற, பண்டமாக இருக்கிற, உலகம் ஒன்று. இவற்றை ஒலி உலகம், பொருள் உலகம் என்று தமிழிலே சொல்லலாம். ஒலி உலகம் காதாலே கேட்பது ஒலி. ஏனைய இந்திரியங்களினால் நுகர்வது பொருள். ஒலி உலகம் என்று சொல்கிற சப்தப் பிரபஞ்சம் நாதத்தின் கூறுபாடு. நாம் பேசுகிற பேச்சு ஒலி உருவாக வரு கிறது. இந்த ஒலியானது பஞ்சபூதங்களுள் ஒன்றான ஆகாசத்தின் சம்பந்தம் உடையது. ஒலியோடு சம்பந்தமுள்ள வெளியே - ஆகாசமே - பஞ்சபூதங்களில் முதலில் தோன்றியது; முதலில் தோன்றும் தத்துவம் நாதந்தான். வாயும் காதும் மனிதனுடைய அவயவ அமைப்பில் பார்த்தாலும் வாய் சிறப்பாக அமைந்திருக்கிறது. வாய் மாத்திரம் இருந்தால் போதாது. வாயினால் சொல்வதைக் கேட்கக் காதும் வேண்டும். காதும், வாயும் சேர்ந்தால்தான் முழுப் பயனும் உண்டாகும். முன்பு டெலிபோன் அமைப்பு ஒருவகையாக இருந்தது. அதாவது இரண்டு கருவிகள் இருக்கும்; ஒன்று பேசுவதற்கும் மற்றொன்று கேட்பதற்குமாக அமைந்திருந்தன. அதில் ஒன்று பழுதுபட்டாலும்