பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 துன்பம் வந்தால் என்ன? துன்பம், அவனிடத்திலே துன்பத்தை விளைவிப்பதற்குப் பதிலாகத் தானே துன்பத்தை விளைவித்துத் கொள்ளும். 'இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர்” என்று வள்ளுவர் சொல்கிறார். தமக்குத் துன்பம் வந்து விடுமே என்று துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் அத்துன்பத்திற்குத் தான் துன்பம் விளைவிப்பர். இந்த நிலை, இறைவன் அருளால் நாம் வாழ்கிறோம்; தொழில் படுகிறோம்; சம்பாதிக்கிறோம்; கொடுக்கிறோம்; சம்பாதிப்பதைச் சாப்பிடுகிறோம் என்று நினைப்பவர்களுக்கு உண்டாகும். இது நமக்கு வரவேண்டும் என்பதற்காக மிக எளிய வழியை நம்முடைய குருநாதர் இப்பாட்டில் உபதேசிக்கிறார். "பொருபிடி யும்களி றும்விளை யாடும் புணச்சிறுமான் தருபிடி காவல! சண்முகவா!' எனச் சாற்றி, நித்தம் இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும். எப்படி ஆண்டவனை நினைக்க வேண்டும்? வள்ளி நாயகனாக, ஆறுமுகப் பெருமானாக நினைந்து புகழ வேண்டும். சாற்றி என்ன செய்ய வேண்டும்? இரு பிடி சோறு கொண்டு, இட்டு உண்டு இரும். சோறு என்றால் உண்ணுகிற சோற்றையும் கொள்ளலாம். நுகர்ச்சிக்குரிய எந்தப் பொருளாக இருந்தாலும் அதையும் குறிப்பாகக் கொள்ளலாம். 'நீங்கள் கொஞ்சமாகக் சம்பாதிக்க வேண்டாம். உங்கள் அறிவை, உங்கள் ஆற்றலை உபயோகித்து இரண்டுபிடி சோறு சம்பாதியுங்கள்; இரண்டு மடங்கு பொருள்களை ஈட்டுங்கள். 'பொருபிடி காவல சண்முகவா எனச் சாற்றி நித்தம் இரண்டு மடங்கு சம்பாதியுங்கள். அதை என்ன பண்ண வேண்டும் தெரியுமா? பொருபிடி காவல, சண்முகவா என இறைவனை நினைந்து ஒரு பிடி சோற்றைப் பிறருக்கு இட்டு, அவனை வாழ்த்தியே ஒரு பிடி சோற்றை உண்ணுங்கள். சம்பாதிப்பது இருண்டு பிடி, ஒரு பிடி இட்டுவிட்டீர்கள்; ஒரு பிடி உண்டுவிட்டீர்கள். இனிக் கவலைப்பட எதுவும் இல்லை. 174