பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அடிக்கடி போய் வருகிற கோயிலுக்கு நம்மை அழைத்துப் போவார்கள். அதனால் மற்ற இடங்களில் கோயில் இல்லை என்பது அன்று. அருணகிரிநாதர் முருகப் பெருமானின் திருவருளி னால் எல்லா விதமான இன்பங்களையும் பெற்று, பிரபஞ்சச் சேற்றைக் கழித்து உய்வு பெற்றவர். ஆதலால் இங்கே முருகப் பெருமானை நினைக்கச் சொல்கிறார். அதனால் மற்றத் தெய்வங் களை நினைக்க கூடாது என்பது பொருள் அல்ல. தெய்வத்தை நம்பி வாழ வேண்டும் என்ற அடிப்படையான கருத்தை முருகன் மேல் சார்த்திச் சொல்கிறார். காட்டு நிகழ்ச்சி முருகனை நினைக்கச் சொல்லும் போது அவனை வள்ளி நாயகனாகவும், ஆறுமுகப் பெருமானாகவும் நமக்குக் காட்டு கிறார். வள்ளி கல்யாணத்தைக் காட்டிலே நிகழ்ந்த காட்சியாகச் சித்தரிக்கிறார். பொரு பிடியும் களிறும் விளையாடும் புணச்சிறுமான் தருபிடி காவல! வள்ளிநாயகி வாழ்ந்துகொண்டிருந்த இடம் காடு. அங்கே யானைகள் இருந்தன. தனக்கு முன்பே தேவ யானை ஒரு மனை யாட்டியாக வாய்த்தும், எம்பெருமான் காட்டிலுள்ள வள்ளி என்னும் பெண் யானையை தேடிச் சென்றான். வள்ளிநாயகி திருமால் அம்சமான முனிவருக்கும், திருமகளின் அம்சமான மானுக்கும் பிறந்தவள் என்பதை முன்பே சொல்லி இருக்கிறேன். காட்டில் லட்சுமி அம்சமுடைய மான், குழந்தையை வள்ளிக் கிழங்குக் கொடி யருகில் ஈன்றுவிட்டுப் போயிற்று; அதனால் அவளுக்கு வள்ளி என்ற பெயர் அமைந்தது. மான் வயிற்றில் பிறந்த வள்ளி காட்டு யானைகளோடு தானும் ஒரு பெண் யானையாக மிடுக்கோடும் செருக்கோடும் வாழ்ந்து கொண்டிருந்தாள். பொரு பிடியும் விளையாடும் களிறும் அந்தக் காட்டில் நடந்த அழகான காட்சியை அருணகிரியார் தம்முடைய கற்பனையால் படம் பிடித்துக் காட்டுகிறார். புனத்தில் திரிந்து வாழ்ந்த சிறு மான் ஒன்று ஈன்ற பெண்மானா கிய வள்ளி அக்காட்டில் ஒருபிடிபோல், பெண் யானையைப் i82