பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் எப்போதும் அருணகிரிநாதர் ஒரு பாட்டில் இரண்டு கருத்துக் களைச் சொன்னாரானால் பெரும்பாலும் அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாக இருக்கும். இரண்டு கருத்துக்களை அடுத்தடுத்து வைப்பதே, ஒரு கருத்தை மற்றொரு கருத்தால் வளப்படுத்துவதற்காகத்தான். இப்போது பார்க்கப் போகிற பாட்டிலும் இரண்டு கருத்துக்களைச் சொல்கிறார். இரண்டு நிகழ்ச்சிகள் கந்தபுராணத்தில் வரும் இரண்டு நிகழ்ச்சிகள் பெரும் பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கந்தப் பெருமானின் அவதாரக் கதையும், வள்ளி நாயகியின் திருமணக் கதையும் கந்தபுராணத்தில் முன்னும் பின்னும் சிறப்பாக அமைந்திருக் கின்றன. கந்தப் பெருமானின் அவதாரக் கதை தட்சிணாமூர்த்தி யின் கதையில் தொடங்குகிறது. இந்தப் பாட்டில் அருணகிரிநாத சுவாமிகள் எடுத்த உடனேயே வள்ளியெம் பெருமாட்டியின் திருமணத்தைச் சொல்லி, பின்னே முருகனின் அவதாரத்திற்கே காரணமான தட்சிணாமூர்த்தியின் கதையைச் சொல்கிறார். நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி முற்றாத் தனத்திற்கு இனிய பிரான், இக்கு முல்லையுடன் பற்றாக் கையும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியால் செற்றார்க் கினியவன், தேவேந்த்ர லோக சிகாமணியே. முதல் இரண்டடியில், "நீலவள்ளி முற்றாத் தனத்திற்கு இனிய பிரான் என்றும், அடுத்த அடிகளில், 'சங்க்ராம வேளும் பட விழியால் செற்றார்க்கு இனியவன்' என்றும் சொல்கிறார். “காம