பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை இவற்றை அருளிய இவருக்கு எத்தகைய இன்பம் கிடைத்திருக் கும்! என்ற எண்ணம் உண்டாகிறது. அப்போது விளையும் உணர்ச்சியை எந்தச் சொல்லால் சுட்டுவது? பொறாமை என்று சொல்லலாமா? நம்பிக்கை என்னலாமா? ஆர்வம், ஆசை, காதல், பசி, ஏக்கம் - இவற்றில் ஏதாவது ஒன்றைச் சொல்லலாமா? ஏக்கம் என்று ஒருவாறு சொல்லலாம்; ஆனால் அந்த ஏக்கத்திலே ஒர் ஆறுதலும் இருக்கிறது. பசி என்று சொல்லலாம்; ஆனால் அந்தப் பசியிலே ஒரு சிறு நிறைவும் இருக்கிறது. அருணகிரியார் கூறும் அநுபவம் சத்தியமாகத்தான் இருக்க வேண்டுமென்று உள்ளத்தே ஓர் ஒளிக் கீறல் தோன்றுகிறது. இந்தச் சொற்பொழிவுகள் கந்தர் அலங்காரப் பாடல்களைப் பூதக் கண்ணாடியில் வைத்துப் பெரியவையாகக் காட்டுகின்ற முயற்சி. அப்பாடல்களில் உள்ள அழகுகள், அநுபவ உண்மைகள் பின்னும் நன்றாகப் புலனாக வேண்டும் என்பது என் ஆசை. இவற்றைப் படித்தவர்கள் கூறுபவற்றிலிருந்து இந்த ஆசை வீணாசையன்று என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லாம் முருகன் திருவருள். அன்பர் திரு. அனந்தன் கருத்தாலும் கரத்தாலும் அலங்காரத் தில் ஒன்றிப்போய் எனக்கு உதவி செய்கிறார். முருகன் திரு வருளால் அவருக்கு எல்லா நன்மைகளும் உண்டாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கி.வா. ஜகந்நாதன் 1.4.O3, 1958