பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வனைக் காமவிள்ையாடல் உடையவன் என்று எண்ணாதீர்கள். அவன் காமனை எரித்த ஞானவிழியிலே தோன்றியவன்' என்று முதலில் குறிப்பித் தார். 'ஏனலைக் காக்கின்ற வள்ளிக்கு இனிய பிரான் என்பதனால் இழிந்த நிலையில் இருப்பவன் என்று எண்ணாதீர்கள், அவன் தேவேந்திர லோகத்தில் உள்ளவர்களால் வணங்கப் பெறுபவன், என்று பின்னால் புலப்பட வைத்தார். நெற்றா - முதிராத பசும் கதிர் - இளங்கதிர். ஏனல் - தினை முற்றாத்தனம் - தளர்ச்சி பெறாத நகில். இக்கு - கரும்பு. பற்று ஆக்கை; ஆக்கை - உடம்பு. சங்க்ராமம் - போரைச் செய்த வேள் - காமன். பட ட அழிய செற்றார் - சிவபிரான். சிகாமணி - முடிமணி. ஏ. அசைநிலை) இது கந்தர் அலங்காரத்தில் 58-ஆவது திருப்பாடல்.