பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பொங்கார வேலையில் வேலை விட்டோன் - அருள்போல் உதவ எங்காயினும்வரும் ஏற்பவர்க்கு இட்டது. நாம் செய்த காரியத்தின் பயன் உடனேயே கிடைக்குமா என்று எதிர்பார்க்கக் கூடாது. தேசியச் சேமிப்புப் பத்திரம் வாங்கி னால் மறுநாளே காசு கொடுத்து விடுவார்களா? பல காலத் திற்குப் பிறகுதான் மொத்தமாக வரும். ஒளவையின் பாடல் இதைப் பற்றி ஒளவைப்பாட்டி சொல்கிறாள். "அப்பா உன்னுடைய வீட்டில் தென்னமரம் இருக்கிறதா? இருந்தால் நீ அதை எப்போது வைத்தாய்?" 'தென்னமரம் இருக்கிறது. நன்றாகக் காய்க்கிறது. அதை நான் வைத்தேனா? எப்போதோ எங்கள் தந்தை காலத்தில் அவர் வைத்தது.' 'அப்படியா? அவர் காலத்தில் வைத்த தென்ன மரம் இப்போது உனக்கு நல்ல தேங்காய், இளநீர் எல்லாவற்றையும் கொடுக்கிறது அல்லவா? தந்தையார் வைத்த போது அதற்கு வெறும் தண்ணீர்தான் விட்டார். அது இப்போது நல்ல இள நீராகத் தருகிறது அல்லவா?. அப்படியே நீ இப்போது தர்மம் செய்தால் அந்தத் தர்மம் விளைந்து பின்னால் உனக்கு நன்றாகப் பயன் தரும். தென்னமரம் தனக்கு இட்ட தண்ணீரை, பலகாலம் கழித்துத் தன் தலையாலே சுமந்து வெறும் நீருக்குப் பதிலாகச் சுவையுள்ள இளநீராகத் தருகிறது.' 'நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாள்.உண்ட நீரைத் தலையாலே தான்தருத லால்' "ஒருவனுக்கு உபகாரம் செய்தால் அதன் பயன் மறுபடியும் நமக்கு எப்படிக் கிடைக்கும் என்று நீ யோசிக்காதே. நிச்சயமாக நீ செய்ததைவிடக் குறைவாகத் கிடைக்காது; அதிகமாகவே கிடைக்கும், தென்ன மரத்திலிருந்து இதைத் தெரிந்து கொள்ள லாம்' என்கிறாள் பாட்டி. 210