பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஐந்தாவது சொற்பொழிவு காலனை வெல்லுதல் என்பது காலனை நேரே அழைத்து அறைகூவும் முறையில் அமைந்த பாடலின் விளக்கம் இது. அவ்வாறு செய்யும் ஆற்றல் இறைவ னுடைய அருள் துணையினால் உண்டாவது என்பதை இந்த விளக்கத்தால் உணரலாம். கடைசிச் சொற்பொழிவு, வேண்டுகோள். அருணகிரியார் யம பயம் இன்றித் தம்மைப் பாதுகாக்கும்படி மயில் வாகனப் பெருமாளை வேண்டிக் கொள்ளும் பாடலின் விரிவுரை இது. தேனாம்பேட்டையில் உள்ள முருகன் திருக்கோயிலில் கந்தர் அலங்கார விரிவுரை ஏறத் தாழ மூன்று ஆண்டுகளாக நடை பெற்று வந்தது; அந்த விரிவுரை 1958-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதியோடு நிறைவெய்தியது. சொற்பொழிவுகளையெல்லாம் அன்பர் அனந்தன் சுருக்கெழுத்தில் எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஆதலின் இனித் தொடர்ந்து இந்த அலங்கார மாலைப் புத்தகங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முருகன் திருவருளைத் துணைக் கொண்டு இன்னும் எட்டுப் புத்தகங்களில் இந்த மாலையை நிறை வேற்றலாம் என்று எண்ணுகிறேன். பல வகையில் இந்த வெளியீடுகளுக்கு ஊக்கம் அளித்து வரும் அன்பர்களுக்கு என் நன்றி உரியதாகும். கி.வா. ஜகந்நாதன் 14.O8.1958 236