பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பார்த்தும் அவனது தண்டைச் சிற்றடியை வந்திக்கவில்லையா நீ என்று மூச்சுவிடாமல் கேட்டார் அந்தப் பெரியவர். 'இல்லையே சுவாமி இந்தப் பாவியின் வினை - அங்கே போயும், அந்தப் பணக்காரரைப் பார்த்தும் - அவர் சிற்றடியை வந்திக்க வேண்டும் என்கிற அறிவை மறைத்து விட்டதே: தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் என்று இவன் அழுதான். வந்தித்தல் அந்தப் பெரியவர் அவனைப் பார்த்து மிகவும் இரக்கத்தோடு சொன்னார்: "அப்பா உன்னுடைய துன்பங்கள் நீங்க வேண்டு மானால் அந்தப் பணக்காரனைத்தான் சரணாகதி அடைய வேண்டும். அவனை நினைக்காமலேயே முன்பு இருந்தாய்; இப்போது நினைக்க ஆரம்பித்தாய். அவன் விலாசம் எது என்று தெரியாமல் இருந்தாய்; அதைத் தெரிந்துகொண்டு சேவிக்க ஆரம்பித்தாய். மாளிகைக்குள் நுழைந்து அந்தப் பெருமானை யார் என்றும் தெரிந்துகொண்டு விட்டாய்; காலிலே தண்டை அணிந் துள்ள அடையாளத்தையும் கண்டு கொண்டாய். இனி, காரியால யத்துக்கு ஏழு மணிக்குப் போக வேண்டுமென்றால் ஐந்து மணிக்கே எழுந்திரு. நீராடி விட்டு, திருநீறு அணிந்து கொண்டு வீட்டை விட்டு ஆறு மணிக்கே கிளம்பி விடு. நேராக முதலில் அவன் மாளிகைக்குப் போ. அவனது தண்டைச் சிற்றடியை, அன்பினால் கெட்டியாகப் பற்றிக் கொள்' என்றார். சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன். இதுவரைக்கும், எம்பெருமான் ஒருவன் இருக்கிறான். அவனிடம் சென்றால் நம்முடைய துன்பம் எல்லாம் நீங்கிப் போகும் என்கிற நினைப்பே இல்லாமல் இருந்தான். எதை எதையோ சிந்தித்துச் சிந்தித்து மங்கிக் கொண்டிருந்தான். இறைவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தது. நல்ல குருநாதர் ஒருவர் அவனுக்குக் கிடைத்தவுடன் இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். 250