பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி வேகம் சிந்திக்க ஆரம்பித்தால் போதுமா? இறைவனது கோயிலைத் தாண்டிப் போகும்போதும், வரும்போதும் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தானே தவிர நின்று ஒரு கணமாவது சேவிக்க வில்லை. நடையிலே வேகம்; வாக்கிலே வேகம்; மனத்திலே வேகம். "வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க." என்கிறார் மாணிக்கவாசகர். இறைவன் அருளால் முதலில் வேகம் கெடவேண்டும். பெரிய நகரங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே அது இன்னும் மோசம். பம்பாய்க்குப் போயிருக்கிறேன். விழாக்கள் கொண்டாடுவதானால் அங்கே இரவு நேரங்களில் 830 மணிக்குப் பின்தான். அதுவும் இரவு ஒரு மணி, இரண்டு மணி வரையில் கொண்டாடுவார்கள். ஒருவர் விளையாட்டாகச் சொன்னார். அவருடைய மனைவி குழந்தையிடம், 'அப்பா வருவாரடா என்று சொன்னாளாம். அந்தக் குழந்தை, "அப்பா யார்? ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை நம் வீட்டுக்கு வருகி றாரே அந்த மாமாவா?’ என்று கேட்டதாம். காரணம்: குழந்தை எழுந்திருப்பதற்குள் காலையில் காரியாலயம் போய் விடுகிறான். இரவு அவன் வருவதற்குள் குழந்தை தூங்கி விடுகிறது. அப்பாவை மற்ற நாட்களில் குழந்தை பார்க்கிறது இல்லை; ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் பார்க்கும். பெரிய உத்தியோகம். ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று உயர உயர மனைவி மக்களோடு சற்று அமைதியாக உட்கார்ந்து பேசுவற்குக்கூட நேரம் கிடைக் காமல் போய் விடுகிறது. நாகரிகம் சிறக்கச் சிறக்க மனிதனின் வேகமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கார் உடையவன் காரில் பறக்கிறான். இல்லாதவன் கால்களினாலே ஒடுகிறான். ஒரு கணம்கூடக் கோயில் வாசலிலே நின்று வணங்க நேரம் இல்லை. உபதேசப் பயன் 'ஆண்டவன் இருக்கும் விலாசம் - கோயில் - தெரிந்து கொண்டால் பயன் இல்லை. கோயிலுக்குள் போக நேரம் 251