பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இல்லை என்றாலும், போகிற வழியில் கோயிலின் வாசலிலேயே நின்று ஒரு கும்பிடு போடக்கூடாதா?” என்று குருநாதர் சொன்ன வுடன், கொஞ்சம் வேகம் தணிந்தவனாக இறைவனது ஆலயத்தைக் கண்டால் நின்று கும்பிடப் பழகிக் கொண்டான் இவன். வேகமாக ஒடிக் கொண்டிருக்கிற மனத்தில் குருநாதர் இறை வனைப் பற்றிய நினைப்பையும் உண்டாக்கி ஒட விட்டார். பிறகு போகிற போக்கிலே ஒரு கணம் ஆண்டவன் கோயில்முன் சற்று நின்று சேவிக்கிற நிலையையும், ஒரு கணம் வேகமின்றி அமைதி யாக மனம் நிற்கிற நிலையையும் உண்டாக்கினார். நின்று பார்க்கும்போது வேறு யாரையாவது பார்த்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது? யாரைப் பார்க்க வேண்டுமோ அவனைப் பார்க்க வேண்டும். பலருக்கு மத்தியிலே இருக்கிற அவனைக் கண்டுகொள்ள அடையாளம் தெரிய வேண்டாமா, "ஆள் கறுப்பாய், உயரமாய், கட்டையாய் இருப்பான் என்று அடையாளம் சொல்வது வழக்கம் அல்லவா? அப்படி, குருநாதர் இவனுக்கு ஆண்டவனைக் கண்டு தொழ, அடையாளம் சொல்லிக் கொடுத்தார். "அப்பா அவனைப் பார்த்தவுடனேயே அவன்தான் எசமானன்.என்று கண்டு கொண்டுவிடலாம். ஆனால் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க நமக்குத் தைரியம் கிடையாது. அவன் தாளைக் குனிந்து பார். கல்கல் என்று ஒலிக்கும் தண்டை இருக்கும். சின்ன அடி; பெரிய அடி அல்ல. அந்தத் தண்டைச் சிற்றடியைப் பற்றிக் கொண்டு சரணாகதி அடைய வேண்டும். துன்பங்கள் எல்லாம் நீங்கி உய்வு பெறுவதற்குச் சரணாகதி அடைய வேண்டிய இடம் அந்தச் சின்னத் திருவடிதான்' என்று உபதேசம் செய்தார். ஆசாரியரின் அநுக்கிரகத்தினால், பெரியவர்களுடைய சம்பந்தத் தினால், சிறுமை நீங்கி, பெருமை வந்துவிடும் என்று சொல்வார் கள். அப்படி இவனுடைய ஊழ்வினையின் பயனாக, பெரிய வருடைய சம்பந்தம் கிடைத்தது. இவனுடைய மனப் பக்குவம் உயர ஆரம்பித்தது. எதை எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கிற மனத்தை இறைவனைப் பற்றியும் சிந்திக்கச் செய்தான். எங்கெங்கோ ஒடிக் கொண்டிருக்கிற கால்களைக் கோயிலைக் 252