பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் முன்கூட்டியே கம்பளி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இதில் மற்றொரு லாபமும் உண்டு. குளிருகிற காலத்தில் வருகிற கம்பளிக்கு விலை அதிகமாக இருக்கும். முன்கூட்டியே வாங்கினால் கொஞ்சம் மலிவாக வாங்கலாம். ஆகையால் பலர் குளிர் வருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னால் கம்பளியைத் தேடி வாங்கிக் கொள் கிறார்கள், மலிவாக வாங்குகிறார்கள். அவர்கள் புத்திசாலிகள் என்ற பெயரையும் எடுக்கிறார்கள். வெயிலுக்குக் குடை வேண்டும். மழைக்கும் குடை வேண்டும். வெயிலும் மழையும் இருக்கும்போது குடையை விரிக்க வேண்டு மென்று தோன்றுகிறது. ஆனால் குடையை நாம் வாங்கி வைத் திருந்தால்தான் வெயிலும் மழையும் வரும்போது விரிக்க முடியும். இவ்வண்ணமே நமக்கு வருகிற துன்பங்களுக்கு முன்பாகப் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும். நாம் புதிதாகச் சாஸ்திரம் கற்க வேண்டாம். யமன் நம்மைத் தேடிக் கொண்டு வருவான் என்பது யாவரும் அறிந்த செயல். நாம் ஒரு சமயத்தில் இறந்து விடுவோம் என்கிற உண்மையை யாவரும் அறிவார்கள். அதற்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்கிறவர்கள்தாம் பெரியவர்களாக விளங்குகிறார்கள். அருணகிரிநாத சுவாமிகள் இனிமேல் வருகிற துன்பத்திற்கு இப்போதே ஒரு மருந்து சொல்கிறார். அருணகிரியார் கூறும் உபாயம் கடுமையான வேலை உடம்புக்குத் துன்பத்தைத் தருகிறது. மரணம் உயிருக்குத் துன்பத்தைத் தருகிறது. எழுத்து அறிவு இல்லாதவர்கள் என்று நாம் சொல்லும் ஏழைகள் இசைப்பாட்டுப் படியே தங்கள் உடலுக்கு வரும் இளைப்பைப் போக்கிக் கொள்கிறார்கள். அதுபோல் நாமும் பாட்டுப் பாடி உயிருக்கு வருகிற துன்பமாகிய மரணத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்ற உபாயத்தைச் சொல்கிறார். நம்மைப் பார்த்து அவர் அந்த உபதேசத்தைச் சொல்லவில்லை. இறைவனைப் பார்த்துத் தாம் வேண்டிக் கொள்ளும் முறையில் சொல்கிறார். 'ஆண்டவனே, நாளைக்கு யமன் வருவானே! அவன் வரும்போது அஞ்சேல் என்று நீ என்முன்னே வந்து காப்பாற்ற வேண்டும். அதற்காகப் படிக்கும் திருப்புகழ் போற்றுவன்' என்று சொல்கிறார். 17