பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 எப்படி இரகசியமாகப் பேச்சு அமைகிறதோ, அப்படியே இறை வனிடத்தில் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுஇன், பஞ்சாட்சர மந்திரமும் பிறர் காதுபட யாரும் ஜபிக், LðfTL–i–ffff356ľT. வற்றிய ஒலைதான் கலகலக்கும். பச்சோலை சத்தம் உண்டாக்காது. பேச்சு அதிகமாக இருந்தால் உள்ளே பண்டம் இல்லாத ஆசாமி என்று கண்டு கொண்டு விடுவார்கள். பேசாமல் இருப்பதைவிட மனிதனுக்கு அரியது வேறு ஒன்றும் இல்லை. மூன்று கரணங்களில் ஒன்றாகிய வாக்கு முதலில் அடங்கினால் தான் பிற கரணங்களுடைய செயல் அடங்கும். "மோன மென்பது ஞான வரம்பு' என்று சொல்வர். இறைவன் சந்நிதானத்திற்குப் போகும் இடத்திலுள்ள தலைவாசல் ஞானம். அந்த ஞானத் தலைவாசலுக்குள் புகுந்து விட்டால் பேச்சுக்கு இடமில்லை; பேச்சு அற்றுப்போன, உரை இல்லாத நிலை வந்துவிடும். 'வேலவன் எனக்கு எத்தகைய ஞானத்தைப் போதித்தான் முதலில் பஞ்சபூதங்கள் அற்றுப் போயின. அடுத்தபடி உரையும் அற்றது' என்கிறார் அருணகிரியார் 'உரை அற்று” - உணர்வு அறுதல் உரை அற்றுப் போதல் எளிய காரியம் அன்று. அதைச் சாதிக்கவே வாரத்திற்கு ஒரு நாளாவது மெளனமாக இருந்து பழகுவது பழைய காலத்தில் வழக்கம். பல பல எண்ணங்களை நினைந்து நினைந்து பேசுகின்ற மனிதனுக்குப் பேச்சு அடங்க வேண்டுமானால் எண்ணுகிற எண்ணங்கள் அடங்கவேண்டும். எண்ணங்களை அடக்குவதற்குப் பெரியவர்கள் ஒரு சுலபமான வழியைச் சொல்லிக் கொடுத்தார்கள். 'சிந்தனை அதிகமாக ஓடாமல் அடக்க, நாம் எங்கே பழகுகிறோமோ அங்கே உள்ள வற்றை மட்டும் சிந்திக்க வேண்டும். அதற்குமேலே போனால் கொஞ்சம் சிந்தனைக்கு லகான் போடு' என்றார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்; சாப்பாட்டைப் பற்றி மட்டும் நன்றாகப் பேசலாம்; சிந்திக்கலாம். அதற்கு மேலே 28O