பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 குத்தி, அரிசியாக்கி, சோறாக்கிச் சாப்பிடுகிற வரைக்கும் கருவியும் உழைப்பும் தேவை. சாப்பிட்ட பிறகு பசி ஆறுகிறது; வேலை இல்லை; தூங்கத்தான் வேண்டும். அப்படி ஜீவபோதம் கழல்கிற வரையில் உபாயம் தேவை; முயற்சி தேவை. அவர் மேற்கொண்ட சாதன வகைகளினால், உபாயங்களோடு கூடிய முயற்சியினால், ஆண்டவன் கருணை செய்யப் பிரபஞ்ச வாசனை அற்றது; வாங் மெளனம் வந்தது; மனோமெளனம் வந்தது, காஷ்ட மெளனம் உண்டாயிற்று ஜீவபோதம் கழன்றது. இது வரைக்கும் உபாயம் இருந்தது. ஜீவபோதம் கழன்ற பிறகு எல்லா உபாயங்களும் அற்றுப் போயின. உபாயம் அற்று. கரையற்ற அநுபவம் எல்லா உபாயங்களும் அற்றுப்போன பிறகு, தன் செயல் என்பது எதுவும் இல்லாதுபோன பிறகு, விளைவது என்ன? அநுபவம். அதைச் சொல்கிறார். கரை அற்று. ஜீவபோதம் கழன்று, உபாயங்கள் எல்லாம் அற்றுப் போகிற நிலை வரைக்கும் படிப்படியாகக் கருவிகரணங்களோடு சாதன வகைகளை மேற்கொள்ள வேண்டும். இது வரைக்கும் எங்கே போனாலும் எல்லை உண்டு. இடம், காலம், முயற்சி ஆகிய எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு. ஒரு பானையில் சர்க்கரைப் பொங்கல் பண்ணுகிறோம். எல்லாவற்றையும் சாப்பிட முடி யாது; வயிற்றுக்கு எல்லை உண்டு. நாம் அநுபவிக்கிற சுக துக்கங்களுக்கு எல்லை இருக்கிறது. எல்லைக் கல்லை எங்கே பார்த்தாலும் நட்டுக் கொண்டிருக்கிற இவ்வுலகத்தில் அங்கங்கே எல்லையைக் கட்டிக் கொண்டு சாதனம் பண்ணி வந்தவர் அருணகிரியார். இப்போது அவர் வந்திருக்கிற வெளியிலோ எல்லை இல்லை. கரை கிடையாது. என்ன கரை? காலம் ஒரு கரை. இடம் ஒரு கரை. இந்த இரண்டு கரைகளுக்கும் உட்பட்டு, எல்லைக்கு உட்பட்டு, ஒவ்வொரு சாதனத்தையும் செய்து வந்தது போக, ஆண்டவனது அருட்பிரகாச இராசதானியை அடைந்த வுடனேயே கால எல்லை, இட இல்லை எல்லாவற்றையும் 284