பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தவத்தைவிட அன்னதானம் என்னும் தவத்தையே பெரிதாக அந்தக் காவியம் சொல்கிறது. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. அவள் அறவண அடிகளிடத்தில் உபதேசம் பெற்றாள். பிறருக்கு ஞான உபதேசம் செய்து நன்மை விளைவிக்கலாம் என்று அவளுக்குத் தோன்றவில்லை. யாவருக் கும் பயன்படுகிற ஒரு காரியத்தை அவள் மேற் கொண்டாள். அவளுக்கு அமுத சுரபி ஒன்று கிடைத்தது. 'பசித்தோர் எல் லோரும் வாருங்கள்' என்று அழைத்து அவர்களுக்கு எல்லாம் சோறு கொடுத்தாள். அன்ன தானம் இந்த நாட்டில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதனோடு அன்னதானத்தைச் சேர்த்துச் செய்வார்கள். இறைவனுடைய திருக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றால் அன்னதானமும் முக்கிய மாக நடைபெறும். திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தால் அவற்றுடன் அன்னதானத்தையும் நடத்துவது இந்த நாட்டு வழக்கம். யார் பசித்து வருகிறார்களோ அவர் களுக்கு அன்னம் அளிப்பது சிறந்த அன்னதானம். 'அன்னஸ்ய rதிதம் பாத்ரம்' என்று வடமொழியில் ஒரு வாக்கியம் உண்டு. அன்னமிடுவற்குத் தக்க பாத்திரம் பசித்து வந்தவர்களே என்பது அதன் பொருள். தவத்தினும் சிறந்தது இந்த அன்னதானத்தைப்பற்றி அருணகிரிநாதர் சொல்லு கிறார். அதுவே தவம் என்றும் சொல்கிறார். தவத்தைச் செய்கிற வர்கள் பெரியவர்களாக இருக்கும்போது, அன்னதானம் செய்ப வர்கள் எப்படிப் பெரியவர்கள் ஆவார்கள் என்று கேட்கலாம். திருவள்ளுவர் இதற்குச் சரியான விடை சொல்கிறார். 'தவம் செய்கிறவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. ஆனால் அன்னதானம் செய்கிறவர்களுடைய ஆற்றலுக்கும் பின்தான் அதை நிறுத்த வேண்டும் என்று அவர் சொல்கிறார். “ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்' 48