பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் என்பது அவர் கூறியுள்ள குறள். தவம் செய்கிறவனுடைய ஆற்றல் பெரிதுதான். அவன் தன்னுடைய ஊனை உருக்கி உண்ணாவிரதம் இருக்கிறான். உடம்பை வருத்தித் தவம் செய்கிறான். இந்திரிய நிக்கிரகம் செய்கிறான்; 'உண்ணாது நோற்பார் பெரியர்' என்று பிறிதோரிடத்தில் வள்ளுவர் சொல்கிறார். ஆனால் அந்த உண்ணாவிரதத்திற்கும் ஓர் எல்லை உண்டு. பசி மிகுந்துவிட்டால் தவம் செய்வாருடைய தவம் அழிந்துவிடும். இவர்கள் தாம் பட்டினி கிடப்பார்களேயொழியப் பிறர் பட்டினியைப் போக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். அன்னதானம் செய்கிறவனோ தன்னுடைய பசியைப் போக்கிக் கொள்வதோடு, பசித்து வருகிற மற்றவர் களுடைய பசியையும் போக்கிவிடுகிறான். தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்கமாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்றென்பதாம் என்று இக் குறளுக்குப் பரிமேலழகர் விளக்கமாக உரை எழுதியிருக்கிறார். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்யவே தான், 'நெல்பயிர் விளை' என்று சொன்னாள் நம் பாட்டி. முன்பு நம் நாட்டில் எங்கெல்லாம் நிலம் இருந்ததோ அங்கெல்லாம் நெல் விளைந்தது. வீடும் வயலும் 'இடம்பட வீடு இடேல்' என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். வீட்டை இடம் அழியும்படி பெரியதாகக் கட்டாதே என்பது அதன் பொருள். ஒரு பக்கத்தில் நெல் விளைச்சலை அதிகப்படுத்துங்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றொரு பக்கத்தில் நெல் விளைகிற வயல்களை அழித்துக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக் கிறோம். அன்னத்தை விளைக்கிற நிலம் அழிந்துபோகிறது. அன்னத்தைச் சாப்பிடுகிற மக்கள் அங்கே குடியேறுகிறார்கள். உண்ணுதற்குரிய அன்னத்தை அழித்துவிட்டு உண்ணுகின்ற மனிதன் அங்கே நடமாடுகிறான். இது கூடாது. சிறுகக் கட்டிப் பெருக வாழவேண்டும் என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் நினைத் தார்கள். ஜனத்தொகை இவ்வளவு அதிகமாக இல்லாத அந்தக் காலத்திலேயே இந்த உண்மையை அறிந்து சொல்லியிருக்கிற 49