பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் குமரா! என்கிறார். குமாரன் என்ற சொல்லுக்கு இளமை உடையவன் என்பது ஒரு பொருள். மாரனுடைய அழகைக் குலைப்பவன் என்பது ஒரு பொருள். மாரன் அழகு புறக்கண்ணுக்குத்தான் தோற்றும். குமாரனின் அழகு அகக் கண்ணுக்கும் தோன்றும். - குகன் அடுத்தபடி, குக! என்றார். குகன் - குகையில் இருப்பவன். குறிஞ்சி நிலத்து வள்ளியெம்பெருமாட்டியை மலைக்குகையில் அளவளாவி இன் புற்றான். இந்த ஞானமூர்த்தி எல்லோருடைய இருதயத்திலும் வசிக்கின்றான். இருதயம் குகை போன்ற இடம். இருதய குகையிலே யார் ஞான விளக்கை ஏற்றி வைத்துக் கொள்கிறார் களோ அவர்கள் இருட்டிலே தெரிந்து கொள்ள முடியாது இருந்த எம்பெருமானைத் தெரிந்து கொள்கிறார்கள். இருதயத்திலுள்ள குகையைத் தகராகாசம் என்று சொல்வார்கள். அங்கே அவன் இருப்பதனால் அவனுக்குக் குகன் என்று பெயர் வந்தது. அசுரர்க்குப் பகைவன் ராட்சச பட்ச! ராட்சசர் என்ற சொல் உபலட்சணத்தினாலே அசுரர்களையும் குறிக்கும். நல்ல காரியங்களைச் செய்து வருகிற நல்லவர்களுக்கும், தேவர்களுக்கும் தீங்கை விளைப்பவர்கள் அசுரர்களும் ராட்சசர் களும். இந்த ஒற்றுமையினால் சில சமயங்களில் ராட்சசர்களை அசுரர் என்றும், அசுரர்களை ராட்சசர் என்றும் சொல்வது உண்டு. இங்கே அருணகிரிநாதர் அசுரர் என்ற பொருளில் ராட்சசர் என்பதை அமைத்திருக்கிறார். 'ராட்சசர்களைப் பட்சிக்கின்றவனே என்பது இத்தொடரின் பொருள். “அவர்களைக் கொன்று தின்கின்ற நர மாமிச பட்சிணியா உங்கள் இறைவன் எனக் கிண்டலாகச் சிலர் கேட்கலாம். ஒருவனைப் பார்த்து, "அவனிடம் நீ போகாதே. அவன் உன்னைச் சாப்பிட்டு விடுவான் ஐயா என்று நாம் சொல்கிறோம். 了5