பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 சாப்பிட்டு விடுவான் என்று சொல்வதற்கு என்ன பொருள், இவனையும்விடச் சாதுரியம் நிரம்பியவன் அவன். தன்னுடைய திறமையினாலே இவனை அவன் வென்று விடுவான் என்ற கருத்தையே அப்படிச் சொல்கிறோம். அசுரர்கள் பொல்லாதவர்கள்; நல்லவர்கள் செய்கின்ற யாகங்களை அழிக்கின்றவர்கள்; நல்லவர்களுக்குத் தீங்கை விளைப்பவர்கள். முருகப் பெருமான் நல்லவர்களைக் காப்பாற்றி யாக ரக்ஷணம் பண்ணுகிறவன். யாகத்திலே ஆகுதி பண்ணும் முன், ஸ் ப்ரம்மண்யோம்: என்று மூன்று முறை சொல்வார்கள். பிறகு வேள்வியை நிறை வேற்றுவார்கள். பல தெய்வங்களுக்குச் செய்கின்ற ஆகுதிகளை நடுவில் அசுரர்கள் கைப்பற்றாமல் இருக்கப் பாதுகாவலன் வேண்டுமல்லவா? "ஸ"ப்ரம்மண்யோம்' என்று மும்முறை சொல்லி ஆகுதி செய்வதற்குக் காரணம், முருகப் பெருமான் காவலனாக இருந்து அந்த யாகங்களுக்கு அசுரர்களால் இடையூறு வராவண்ணம் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கமே. அவன் அப்படியே செய்கிறான். 'அந்தண் மறை வேள்வி காவற்கார' என்று திருப்புகழில் வருகிறது. 'திருதரார்க்கொரு காலா" என்றும் திருப்புகழில் வருகிறது. நல்ல காரியங்களுக்கு இடையூறாக இருக்கிற அசுர சம்பத்துக் களை நாசம் செய்கிறவனாக முருகன் இருக்கிறான் என்பது உள்ளுறை. ஆதலின். ராட்சச பட்ச என்கிறார் அருணகிரியார். கலக்கமில்லாத் தீரன் அசுரர்களிடத்தில் இரக்கமும், அவர்களைக் காண்பதனாலே பயமும், கலக்கமும் இருந்தால் முருகப் பெருமானால் அவர்களைச் சங்கரித்துச் சுரர்களுடைய நல்ல காரியங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க முடியாது. முருகன் விட்சோபனாக இருக்கிறான். 76