பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அதுபோல் யார் யார் எந்தப் பொருளை நிரம்ப பெற்றிருக்கிறார் களோ அவர்கள் அதைப் பெறாதவர்களுக்கு உதவி செய்யவேண்டும். இப்படி உதவி செய்வதுதான் அறம் என்று சொல்வார்கள். கையிலுள்ள பணத்தைக் கொடுப்பது மாத்திரம் ஈகை அன்று. கல்வியைக் கொடுப்பதும் ஈகைதான். தம்முடைய ஆற்றலைப் பிறருக்குப் பயன்படுத்துவதும் ஈகை தான். தொண்டு செய்வதும் ஒரு வகையில் ஈகையே ஆகும். இப்படித் தம்மிடம் இருக்கிற ஆற்றலையும், பொருளையும், கல்வியையும் பிறருக்குக் கொடுக் காமல் இருப்பது பாவம் என்று நம்முடைய பெரியவர்கள் கருதினார்கள். ஒளவைப் பாட்டி, "இயல்வது கரவேல்' என்று சொன்னாள். ஈயாமைக்குக் காரணம் உலகில் பொருள் உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடத்திலிருந்து பொருளைப் பெற்று நன்கு வாழ்வதற் குரிய நிலையில் உள்ளவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் பொருள் உடையவன் பொருள் இல்லாதவனுக்கு ஈவது இல்லை. அதற்குக் காரணம் என்ன? முயற்சியினால் ஈட்டப் பெற்றது என்ற எண்ணத்துடன் இருக்கிறான். தானே ஈட்டியதைத் தானே உரிமையுடன் அநுபவிக்க வேண்டுமென்று நினைக்கிறான். பற்றும் ஈகையும் தன்னுடன் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் அதைக் கொடுக்கிறான். மனைவி மக்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுக்கிறான். சில மக்கள் தாம் உண்ணாவிட்டாலும் தம்முடைய மனைவி மக்களுக்கு நிரம்ப அளிக்கிறார்கள். மனைவியும் மக்களும் அந்தப் பொருளை ஈட்டவில்லை. ஈட்டியவன் அவன்தான். தான் ஈட்டியதைத் தானே அநுபவிக்க வேண்டுமென்று நினைக்கிற அவன், அந்தப் பொருளை ஈட்டுவதில் சிறிதும் பங்கு இல்லாத மனைவி மக்களும் அநுபவிக்கும்படி பயன்படுத்துகிறானே; இதற்குக் காரணம் என்ன? அந்த மனைவி மக்களால் தான் இன்பம் அடையலாம் என்ற நினைவு ஒரு காரணம். அவர்களுக்கும் 84