பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வேண்டும் என்றே அவரிடம் அந்தப் பண்டத்தைக் கொடுக்கிறார் கள். அந்த மாதிரி முருகப் பெருமான் உலகத்தில் உள்ள ஏழை களுக்கெல்லாம் தன்னுடைய சத்திவாளை வழங்க முற்பட்டான். முதல் முதலாக ஒரு பெரியவரிடத்தில் கொடுக்க வேண்டும் என்று அந்த ஞான வாளைத் தன்னுடைய தந்தையாகிய சிவ பெருமானுக்கே தந்தான். தான் தொடங்கின காரியத்தை நல்ல இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தக் காரியத்தை அவன் செய்தான். தந்தைக்குத் தந்த வாள் முருகப்பெருமான் ஞான வாள் கொடுக்கிறவன் என்ற செய்தியை உலகம் அறியவேண்டும் என்றால் அதை எப்படி விளம்பரப்படுத்துவது? ஒரிடத்தில் எல்லோருக்கும் சோறு போடு வதானால் பழைய காலத்தில் அன்னக் கொடி கட்டுவார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று. 'நாங்கள் சோறு போடுகிறோம். வாருங்கள், வாருங்கள்' என்று அழைக்க முடியாது. அன்னக் கொடி கட்டிவிட்டால் அதைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் இங்கே சாப்பாடு கிடைக்கும் என்று வருவார்கள். வேண்டி யவர்கள், வேண்டாதவர்கள், ஏழைகள், செல்வர்கள், பசித்தவர் கள், பசி இல்லாதவர்கள் யாரானாலும் அன்னம் பெறுவார்கள் என்பதற்கு அறிகுறியாக அந்த அன்னக் கொடி இருக்கும். அதுபோலத்தான் முருகன் செய்தான். ஞான வாளை யாருக்குக் கொடுக்கிறது என்று ஆளைத் தேடிக் கொண்டு போகவில்லை. எல்லோரும் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படியாக ஒரு காரியத்தைச் செய்தான். ஞான வாள் கொடுக்கிற உத்தியோகம் தன்னுடையது என்பதை உலகம் உணரவேண்டும் என்பதற்காக உலகத்திற்கு எல்லாம் தனித் தலைவனாக இருக்கும் தன் தந்தை யிடம் முதலில் கொடுத்தான். சிவபெருமான் நிரந்தரமாக இருப் பவன். மற்றவர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் மறைந்து விடுவார்கள். ஒருகால் இருப்பார்கள்; மற்றொரு கால் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள். அவர்களிடத்தில் கொடுக்கிறதும் மறைந்து போய்விடும். ஆகையால் என்றைக்கும் உள்ளவனும் தனக்கு மிகவும் நெருக்கமான தந்தையும் ஆகிய சிவபெரு மானிடத்தில் அதைக் கொடுத்தான். i iÖ