பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் "முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர - எனவோதும் முக்கட்பர மர்க்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து.' தனி ஞான வாள் இப்போது பார்க்கும் பாடலில் அந்தப் பெருமையை அலங் காரமாகச் சொல்கிறார். சிவனுக்குப் பிரணவ உபதேசம் செய்தான் என்று சொல்லிவிடலாம். தந்தைக்குத் தனி (ஒப்பற்ற) ஞானவாள் கொடுத்தான் என்று சொல்கிறார். இங்கே வாள் என்பது உருவகம். நாம் காணுகின்ற இரும்பு வாள் தசையைச் சேதிப்பது; உடம்பை வெட்டுவது. ஞான வாளோ உடம்பு சம்பந்தமான நினைவு அல்லது சரீர அபிமானத்தை வெட்டுவது. இந்தச் சரீரத்தையே பிரதானம் என்று நினைத்துச் சரீரத்தில் உள்ள இந்திரியங்களுக்கு இன்பம் ஊட்டுகிறவர்களே காலனைக் கண்டு பயப்படுகிறார்கள். தேகத்தைச் சதம் என்று நினைப்பவர்கள் மரணத்திற்கு அஞ்சு கிறார்கள். சரீரத்தை வெட்டுவது வாள். சரீர அபிமானத்தை வெட்டுவது ஞான வாள். சரீர அபிமானமும், காலனைப் பற்றிய பயமும் ஒன்றினோடு ஒன்று இணைந்தவை. ஆகவே சரீர அபி மானத்தை வெட்டுவது என்பதும், காலனை வெட்டுவது என்பதும் ஒன்றுதான். முருகப் பெருமான் திருவருளினால் சரீர அபி மானத்தைப் போக்கிவிடலாம். உடம்பினின்றும் உயிரைக் கூறு படுத்துவதனால் காலனுக்குக் கூற்றுவன் என்று பெயர் உண்டா யிற்று. இறைவனுடைய அருளைப் பெறாதவர்கள் கூற்றுவனுடைய சூலத்தால் குத்தப்படுவார்கள். அந்தக் காலனை வெல்வதற்கு ஞானம் பயன்படும். ஞானத்தை வாள் என்று சொல்வது ஒரு மரபு. "ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறைஅறைமின்' என்பார் மணிவாசகர். 'முருகப் பெருமான் தன்னுடைய தந்தைக்கு ஒப்பற்ற ஞான வாளைத் தந்தான்; அது மிகச் சிறந்தது. எனக்குச் சக்தி வாளைத் தந்தான். சத்தி வாள் எனக்கு ஆயிற்று. 'குருவிக்கு ஏற்ற இராமேசுவரம்' என்பது போல எனக்கேற்ற சக்தி வாளைத் தந்தான் என்று அருணகிரியார் சொல்கிறார். 1.13