பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கொண்டிருக்கிறோம். உயிருக்காக ஏதும் செய்வதில்லை. இந்த உடம்பிலிருந்து வாழும்பொழுதே உயிர் விளக்கத்துக்குரிய செயல்களைச் செய்யலாம் என்பதை அருணகிரியாரும் பிறரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆதலின் அந்தத் துறையில், இறைவனுடைய அருளின்பம் பெறுந்துறையில், புகுந்து குள்ளக் குளிர ஆழும் பேறு கிட்டாவிட்டாலும், இன்றைக்கே அந்தத் திசையில் ஓர் அடியாவது எடுத்து வைக்க வேண்டும். நாளைக்கு என்று தள்ளிப் போடுகின்றதன்று இது. பணம் ஈட்டினவர்கள் தம்முடைய வரலாற்றைச் சொல்லும் போது, நாமும் முயன்று பொருள் ஈட்ட வேண்டுமென்ற ஆர்வம் பிறக்கிறது. முயற்சி செய்து பொருள் சேமிக்கிறோம். பிறர் வீடு கட்டுவதைப் பார்த்து நாமும் ஒரு சிறு வீடாவது கட்டிக் கொள்ள வேண்டுமென்று எண்ணி, சிக்கனமாக வாழ்ந்து அந்த விருப் பத்தை நிறைவேற்றிக் கொள்கிறோம். நாம் பெரிய செல்வராக இல்லாவிட்டாலும் சில விஷயங்களிலாவது செல்வரைப் போல வாழ ஆசைப்படுகிறோம். உயர்ந்த விலையுள்ள பேனா அல்லது கடிகாரமாவது வாங்கி வைத்துக் கொள்கிறோம். அந்த மட்டிலாவது பணக்காரனுக்குச் சமமாக இருக்கிறோம் என்ற திருப்தி உண்டாகிறது. ஆனால் அருட்செல்வர்கள் இறைவனை வழிபட்டு அவன ருளால் இந்த உலகிலேயே ஒருவகை இன்ப நிலையை அடைந்தார்கள் என்பதை அறிந்தும், அவர்கள் சென்ற நெறியில் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டாவதில்லை. மற்றக் காரியங்களுக்குத் தடை இல்லாமல் கோயிலுக்குப் போகவும் பாராயணம் செய்யவும் ஆயத்தமாக இருக்கிறோம். அருளாளர்கள் ஒருவர் அல்ல, இருவர் அல்ல, நூற்றுக்கணக்கான பேர்கள் அது பூதிமான்களாக வாழ்ந்த நாடு இது. பழங்காலத்தில் இருந்தவர்கள் மட்டும்.அன்று; இக்காலத்தும் ராமகிருஷ்ணர் ரமணர் போன்ற ஞானிகள் சிறந்த அநுபூதி பெற்று விளங்கினார்கள். எல்லாச் சமயத்திலும் அருளநுபவம் பெற்றவர்கள் உண்டு. அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவர்களையும் தெய்வம்போல வைத்துத் தொழ முன் வருகிறோம். அவர்களுக்கும் நமக்கும் உள்ள தூரம் என்றும் மாறாமல், நாம் நின்ற நிலையிலே 123