பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை பவை. இப்போது வாழ்கிற வாழ்க்கையில், வருங்கால வாழ்க் கைக்கு அடிப்படையாகச் செய்யும் வினைகள் தோன்றாமல், அமைதி பெறத் துணையாக அவை இருக்கும். இறைவனுடைய திருப்பாதப் போதுகளைக் கண்ணிலும் கருத்திலும் புதைத்து, மெய்ம்மை குன்றா மொழியில் அவன் நாமத்தை நிறுத்தி வாழ்ந்தால் எல்லாம் இறைவன் செயல் என்ற உணர்வு விஞ்சும். எனக்கு இனிச் செயல் வேறு இல்லை என்ற உறுதிப்பாடு தலைப்படும். அந்த நிலையில் உள்ளவன் எங்கே பார்த்தாலும் இறைவன் திருவடிகளைப் பார்ப்பான்; எதைப் பேசினாலும் அவன் வாயில் திருநாமங்களாக வரும். எதைச் செய்தாலும் இறைவன் திருப்பணியாக அவை முடிவு பெறும். அவன் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் புண்ணிய பாவங் களுக்கு அப்பாற்பட்டனவாக, வரும் பிறவிக்கு வித்தாக அமை யாமல் இருக்கும். 'சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்' என்று மணிவாசகர் குறிப்பிடும் நிலை அது. 2 பிராரப்தம் போன பிறவிகளில் செய்த வினைகள் இந்தப் பிறவியில் நமக்கு இன்ப துன்பங்களை உண்டாக்குகின்றன. அப்படி உண்டாக்குவதற்குக் காரணமான வினைகளைப் பிராரப்தம் என்று சொல்வர். இது மிகவும் வலிமையானது; ஞானம் பெற்றவர் களாலும் போக்குவதற்கு அரியது. இந்தப் பிறவியில் ஞானம் பெற்றவர்கள் இப்போது செய்யும் வினைகளால் பாதிக்கப் படுவது இல்லை; முன்னாலே மூட்டையாகக் கட்டிக் கிடக்கிற சஞ்சிதமும் அவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்காது. ஆனால் இந்தப் பிறவியில் அநுபவிப்பதற்காகக் கொண்டு வந்த பிராரப்தத்தை எந்த வகையினாலும் அழிக்க முடியாது. அதை அநுபவித்தே தீர்க்க வேண்டும். ஊழ்வினை எப்படியும் வந்து முந்திக் கொள்ளும் என்று வள்ளுவர் சொல்கிறார். 143.