பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 உண்டாயிற்று. இறைவனிடத்தில் பக்தி இல்லாவிட்டால் எந்த யோகமும் கைகூடுவது இல்லை. யோகத்தின் பயனே சித்த விருத்தியை நிரோதனம் பண்ணுவது. ஆனால் யோகம் செய்வர் சிலர் உலகம் எல்லாம் தம்மைப் புகழ வேண்டுமென்ற பேராசை கொண்டு எல்லோரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். அவர் களுக்கு மனம் எங்கே அடங்குகிறது? மற்றவர்களைப் போலச் சிறிய சிறிய ஆசை அவர்களிடத்தில் இல்லை என்பது உண்மை தான். ஆனால் உலகத்தைக் கட்டியாள வேண்டுமென்ற பேராசை அவர்களிடத்தில் தலைப்படுகிறது. சித்திகள் முதலில் யோகம் செய்யும்போது மனத்தை அடக்க வேண்டு மென்றே தொடங்குகிறார்கள். ஆனால் இடையே வருகின்ற கிளுகிளுப்புகளிலும், சிலவகையான சித்திகளிலும் அவர்களே மயங்கி விடுகின்றனர். சிலர் கோயிலுக்குத் தர்மகர்த்தர்களாகப் போவார்கள். போகும்போது அவர்கள் மனத்தில் பக்தி இருக்கும். நல்ல தொண்டு புரியவேண்டுமென்ற நோக்கத்தோடு போவார் கள். ஆனால் போன பிறகு அங்கே கிடைக்கும் மலர், பிரசாதம், கெளரவம் ஆகியவற்றைக் கண்டு ஏமாந்து போய் ஆண்ட வனையே மறந்து விடுவார்கள். அதுபோல ஹடயோகம் பண்ணு கிறவர்கள் சுவாச பந்தனம் முதலியவற்றைப் பண்ணும்போது ஏதோ ஒருவகையான இன்பத்தைப் பெற்று, அந்த அளவில் நின்று இறைவனையே மறந்து விடுகிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் இந்த உடம்பு மறைந்து போனால் மறைந்து விடுபவை. உடம்பு உரம் உடையதாகவும், மேலும் மேலும் சாதனைகளைத் தருவதற்குரிய வன்மை உடையதாகவும் இருந் தால் போதாது. மனத்தை லயப்படுத்திக் கடைசியில் அதை மாய்க்கும் வகையில் யோகம் உதவி புரிய வேண்டும். இல்லை யானால் யோகம் செய்து பயன் இல்லை. யோகியரை இழித்தல் உலகத்தில் யோகம் செய்கிறவர்களில் பல பேர் தோல்வியுறு கிறார்கள். பல பேர் முறையோடு செய்ய முடியாதபடி திண்டாடு கிறார்கள். இன்னும் பல பேர் பலவகையான துன்பத்திற்கு 16C