பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் ஆளாகிறார்கள். ஏதோ லட்சத்தில் ஒருவர் யோகத்தின் ஒரு பகுதியில் சித்தி பெறுவதனால், அந்த ஆற்றல்களில் ஏமாந்து மேலே போக வேண்டுமென்ற எண்ணத்தை மறந்து விடுகிறார். இப்படிப் பார்க்கப்போனால் யோகத்தினால் இறைவனை அடைந்த வர்கள் மிகவும் குறைவு என்று தெரியவரும். அதனால்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும், அருணகிரியாரும் யோகிகளைப் பலவிடங்களில் இழிவாகக் கூறியிருக்கிறார்கள். "இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கும் அதற்கு வழியாக மனத்தைத் தெளிவு அடையச் செய்வதற்கும் பக்தி என்ற எளிய முறை இருக்கவும் இவர்கள் எல்லாம் வீணாக மூச்சை அடக்கித் திண்டாடுகிறார்களே! என்ற இரக்கம் அருணகிரியாருக்கு உண்டாகிறது. 'எங்கள் ஆண்டவனாகிய முருகப் பெருமான் திருவருளால் மிக எளிதில் இன்பத்தைப் பெறுவதற்குரிய வழி இருக்கவும், துருத்தியில் காற்று அடைப்பதைப் போல வாயுவை அடைத்து, அது எந்தத் துவாரத்தின் வழியாக வெளியேறலாம் என்று முட்டிப் பார்க்கும்படி செய்து திண்டாடுகிறார்களே! தமக்குத் தாமே விதிக்கின்ற தண்டனை அல்லவா இது? ஐயோ பாவம்' என்று இரங்குகிறார். துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்து அருத்தி உடம்பை ஒறுக்கில் என் ஆம்? 'காற்றை இழுத்துத் தோலினாலான துருத்தி உப்புவது போல வயிறு உப்பும்படியாகச் சுவாச பந்தனம் செய்து, உள்ளே உண்ட காற்றைப் பலபல பாகங்களுக்குச் சுற்றிக் கொண்டுபோய் முறித்துப் பரவும்படி செய்கின்ற செயல்களினால் உடம்புக்கு உண்டாவது துன்பந்தான். இவ்வாறு உடம்பைத் தண்டித்து வேதனை உண்டாகும்படி செய்தால் என்ன பயன் உண்டாகப் போகிறது?" என்று கேட்கிறார். இறைவனுடைய பக்தி இல்லாமல் இப்படிச் செய்வதால் எந்த வகையான பயனும் உண்டாவதில்லை என்பது அவரது கருத்து. - அருணகிரியார் காலத்தில் இப்படிச் சில யோகிகள் இருந் திருக்கக்கூடும். அவர்கள் மூச்சை அடக்கி வயிறு உப்பவும், கண் பிதுங்கவும் சிரமப்படுவதைப் பார்த்திருக்கலாம். இறைவனிடத் தில் பக்தி இல்லாமல், கோயில் மூலைகளில் மூச்சை இழுத்து அடக்கிக் கொண்டு, தாங்கள் சுவாசபந்தனம் செய்வதை விளம் 161