பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை அன்பர்களுக்கு அருள் செய்வதற்காக உலா வருகிறான். வெறும் மூலமூர்த்தியாக இருந்தால் பலர் பயன்பெற இயலாது. தம்முடைய சொந்த முயற்சியால் அவனை அடைந்து அவன் திருவடியைப் பணிந்து அவன் திருவருளைப் பெறுகிறவர்கள் மிகச் சிலரே. முருகப் பெருமான் கருணை மிக்கவன். எங்கே தரிசு கிடக்கிறதோ அங்கே சென்று பெய்யும் மழை போன்றவன். அவ்வாறு செய்கிறவன் தான் என்பதைக் காட்டுவதற்காக மிக வேகமாகச் செல்கிற மயில் வாகனத்தைப் படைத்திருக்கிறான். மழையைக் கண்டு இன்புறுவது மயில் வாகனம். பயிருக்கு நீர் சொரிந்து இன்புறும் மழையைப் போலத் துன்புறுகின்ற ஆன்மாக் களுக்கு அருள் சொரியும் முருகப் பெருமானை நினைந்து இன்புறு கின்ற இயல்பு மயில் வாகனத்திற்கு இருக்கிறது. முருகன் தன்னை விரும்புகிறவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அருள் செய்வதற்குரிய கருவி உடையவன். அதற்கு ஏற்ற வாகனத்தை உடையவன். அதனால், கார்மயில் வாகனனை என்று அருணகிரியார் அடையாளம் காட்டினார். இப்படி. சேந்தனைக் கந்தனை செங்கோட்டுவெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை என்று எட்டுவகை அடையாளங்களை அழகாகச் சொன்னார் அருணகிரிநாத சுவாமிகள். ஒர் அடையாளம், இரண்டு அடை யாளம் என்றால் மறப்பதற்கு நியாயம் உண்டு. இத்தனை அடை யாளங்களையும் சொல்லி, அந்தப் பெருமானைச் சாகும் வரை யில் மறவாமல் இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் நமக்குத் தாழ்வு வராது என்ற நல்லுபதேசத்தைச் செய்கிறார். நாம் இப்போது மறந்திருக்கிறோம். அதனால் தாழ்வுற்று இருக்கிறோம் என்பதை உணர்ந்து அந்தத் தாழ்வு நமக்கு இல்லாமல் போக வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு தாழ்வுக்குக் காரணமாகிய மறதியை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் முருகப் பெருமானுடைய நினைவு வரும் பொருட்டுப் பல பல அடையாளங்களைச் சொல்கிறார். இவ்வளவு அடை 193