பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் ஊருக்குள் இருப்பாருக்கு ஊருக்கு வெளியில் எல்லை இருக் கிறது. உலகத்திற்குள் இருப்பாருக்கு உலகத்திற்கு வெளியே எல்லை இருக்கிறது. உடம்புக்குள் இருப்பாருக்கு இதற்கு வெளியே எல்லை இருக்கிறது. உள்ளே இருந்தால் வெளி உண்டு. வெளியே இருந்தால் உள் உண்டு. இருப்பாரே இல்லா விட்டால் உள் இல்லை; புறம்பு இல்லை. 'என்னை ஒன்று வந்து வந்து தாக்கியது என்று சொன்னேனே. அப்படித் தாக்கிய போது நான் என்பதே இல்லாமற் போய்விட்டது. அதனால் உள், புறம்பு என்ற வேறுபாடும் இல்லாமல் போய்விட்டது. உள்ளும் புறம் பும் இல்லாது ஒன்று தாக்கியது' என்கிறார். புறம்பும் உள்ளும் இல்லாது ஒன்று வந்துவந்து தாக்கும். வெறும் குடத்தைத் தண்ணிருக்குள் போட்டுவிட்டால் குடத்திற்குள்ளும் தண்ணீர் நிறையும். வெளியிலும் தண்ணிர் இருக்கும். உள்ளும் புறம்பும் ஒன்றுதான். குடத்தில் தண்ணிரை எடுத்துக் கொண்டு வெளியில் நடக்கும்போது உள்ளே தண்ணிர் இருக்கும்; புறம்பே இருக்காது. புறம்பு, உள் என்ற வேறுபாடுள்ள நிலையை அப்போது காணலாம். ஆனால் நீர் நிறைந்த பொய் கையில் குடம் தன்னை மறைத்துக் கிடக்கும் போது உள் என்றும், புறம்பு என்றும் வேறுபாடு இல்லை. எங்கும் தண்ணிராக இருக்கும். அப்படிப் பரமானந்தம் வெள்ளமாகப் பொங்க வேண்டும். பொங்கிய ஆனந்தம் இடையில் நின்றதை உடைத்துவிட்டுப் புறம்பு உள் என்ற வேறுபாடற்ற நிலையை உண்டாக்குகின்றது. போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும் இல்லாது ஒன்று வந்து வந்து தாக்கும். வாக்கு இறந்தது இது வாயினாற் சொல்லிச் சுட்டிக் காட்ட இயலாதது. ஐந்து இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட இன்பம். இந்திரியங்களின் நுகர்ச்சியைக்கூட வாயினால் சொல்ல முடியாது என்பார்கள். அப்படி இருக்க, இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட இதனை எப்படி வாயால் சொல்ல முடியும்? பிறவிக் குருடனாக இருக்கும் ஒருவனுக்குப் பச்சை நிறம் என்றால் என்ன என்று விளங்க வைக்க முடியுமா? பார்வை இல்லாதவனுக்கு அதன் வண்ணத் 2O5