பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தடுமாறுகிறோம். ஆள் இன்னார் என்று தெரிந்து கொள்ளப் பழைய நினைவுகளைக் கொண்டு வந்து தெரிந்துகொள்ள முயல் கிறோம். கொஞ்சம் தெளிவு பிறந்தவுடன் பல செய்திகளை மனம் தெரிவிக்கிறது. : அடுப்பில் விறகு விரட்டி எல்லாவற்றையும் வைத்து நன்றாக மூட்டுவதற்குக் கனலைப் போடுகிறோம். நெருப்பைப் போட்டு விசிற விசிறப் புகை கிளம்புகிறது. அது வரும்போது கண்ணை அவிக்கிறது. நமக்கு இருமல் வருகிறது. கண் எரிகிறது. நெருப்புக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டால் உடனே எல்லாம் தீப்பற்றிக் கொண்டு எரிகின்றன. சிறு புகை தோன்றிப் பின்பு பெரும் புகையாகி, சிறுகொழுந்து தோன்றி, அதுவே பெரு நெருப்பாகி விடுகிறது. கனல்கிற வரைக்கும் ஒரே புகை, கொழுந்து தோன்றியவுடன் நெருப்பு உண்டாகி விடுகிறது; புகை அடங்குகிறது; வெளிச்சம் வந்து விடுகிறது. இருட்டில் இருக்கும் வரைக்கும் ஒரே புகை, மயக்கம். கொஞ்சம் ஊதித் தெளிவாக்கிய வுடன் வெளிச்சமாகிவிடுகிறது. புகை அறியாமை. "திருவண்ணா மலை அல்லவா?' என்ற கொழுந்து வந்தவுடன், "நீங்கள் இன்னார் அல்லவா? இன்னார் பிள்ளை அல்லவா? முதலான நினைவுகள் எல்லாம் உடனே வந்துவிடுகின்றன. முதல் நிலை, அறியாமையாகிய இருட்டில் நிற்பானுடைய நிலை. பின், நினைவு என்னும் ஒளியினால் தெளிவு உண்டான ஒளிநிலையில் இருக்கிறான். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இருளும் ஒளியும் - ஓர் இடத்தில் ஒரே இருட்டாக இருக்கிறது. செத்தையைப் போட்டுக் கொளுத்தியவுடன் ஒரே வெளிச்சமாகி விடுகிறது. செத்தை எரிந்து அணைந்தவுடன் திரும்பவும் இருள் கப்பிக் கொள் கிறது. அப்படியே நம்முடைய நினைவும், மறதியும் அடிக்கடி மாறி வருகின்றன. மறப்பு, நினைப்பு ஆகிய இரண்டும் நம் மனத்திற்கு இயல்பு. மறப்பை மயக்கம் என்றும், நினைப்பைத் தெளிவு என்றும் சொல்லலாம். மயக்கமே இருள். தெளிவே ஒளி. இருட்டு ஒளி ஆகிய இரண்டும், அதாவது மயக்கம், தெளிவு ஆகிய இரண்டும், நம் மனத்திற்குள் இருக்கின்றன. இந்த மனம் இப்போது காண்கின்ற பொருளைத் தெரிந்து கொள்வதும், முன்பு 22O